PF பேலன்ஸ் எவ்வளவு? மிஸ்டு கால் கொடுத்தாலே போதும்!

by -53 views

கொரோனா பிரச்சினையைத் தொடர்ந்து நிறையப் பேருக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் நிறையப் பேர் தங்களது பிஎஃப் பணத்தை எடுத்து வருகின்றனர். பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது சேமிப்புத் தொகையை சில நிபந்தனைகளின் கீழ் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு முன்பாக தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று தெரிந்துகொள்ள நினைத்தால் அதற்கு எளிமையான வழி உள்ளது.

பிஎஃப் அலுவலகத்துக்கு அலையத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவும் பார்க்க வேண்டாம். ஒரேயொரு மிஸ்டு கால் போதும். வீட்டில் இருந்தபடியே சுலபமாக பேலன்ஸ் பார்த்துவிடலாம். அது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்…

உங்கள் PF பணத்துக்கு ஆபத்து.. இதை மட்டும் செஞ்சிடாதிங்க!
பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவே நீங்கள் பேலன்ஸ் பார்க்க முடியும். 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பிஎஃப் பேலன்ஸ் குறித்த விவரங்கள் உங்களுக்கு வரும். இச்சேவையைப் பெறுவதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

SMS மூலமாகவும் நீங்கள் பேலன்ஸ் பார்க்கலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இங்கே ENG என்பது மொழி – ஆங்கிலம். மற்ற மொழிகளிலும் நீங்கள் பேலன்ஸ் பார்க்க முடியும்.

அரசு சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் உமாங் ஆப் மூலமாகவும் நீங்கள் பிஎஃப் பேலன்ஸ் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *