BizTamil

வாட்ஸ் அப்பில் பிறர் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரித்துப் பயன்படுத்தும் வகையில், புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிரபல குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப்,

தினசரி ஒரு மணி நேரம் என ஏழு நாட்கள் கேலிகிராஃபி பயிற்சி வழங்கி, கிறுக்கலான ஆங்கிலக் கையெழுத்தையும் அழகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அரசுப் பள்ளி அன்பாசிரியர் பூபதி அன்பழகன்.

மிகவும் குறைந்த கட்டணத்தில் அரசு மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, பி.எச்டி. படிப்புகளைப் படிக்க முடியும்.

அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் மரபணு மற்றும் வளர்ப்பில்தான் குழந்தை உருவாகி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்றபோதிலும், வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்கள், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்த அவர்கள், 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற சுமார் 6 ஆயிரம் பேர், வெயிட்டேஜ் முறையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் பலர் கூலி வேலைக்கு செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது, 2013ஆம் ஆண்டில் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சிபெற்று, வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கவின்கலையை கற்கும்போது பல கலைகளை கற்றுக்கொள்ளலாம் என்று சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கலை இயக்குநர் தா.ராமலிங்கம் கூறியுள்ளார்.
ஓவியம், சிற்பம், படம் வரைதல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதே கவின்கலை படிப்புகள். நல்ல கற்பனை வளம், சிந்திக்கும் திறன், ஓவியத் திறன் ஆகியவை அவசியம். கவின்கலைக்காக தமிழ்நாடு அரசின் கீழ் கல்லூரிகள் செயல்படுகின்றன. www.artandculture.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசின் கல்லூரிகள் குறித்து அறியலாம்.
நல்ல பட்டறிவும் கற்பனை வளமும் இருந்தால் துறையில் பிரகாசிக்கலாம். கணினி அறிவோடு கலைகளை கற்கும்போது புதிய பரிணாமத்தை அடைய முடியும். பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை, முனைவர் பட்டம் வரை பயில முடியும். ஓவியம், கற்பனைக் காட்சி உருவாக்கம், தொழில்துறைக்கு படம் வரைதல் உள்ளிட்ட பணிகளை செய்யலாம். தொழில்நுட்ப வரைபடங்கள் வரைதல், உள்ளரங்க வடிவமைப்பு, உலோக வடிவமைப்பு ஆகிய வேலைகளும் உண்டு. வண்ணம் பூசுதல், அச்சு தயாரித்தல், சிற்பம், மேடை வடிவமைத்தல் உள்ளிட்டவற்றிலும் சிறக்கலாம்.
இந்நிலையில், கவின் கலை படிப்புகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்து கற்க கசடற நிகழ்ச்சியில் பேசியுள்ளார் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கலை இயக்குநர் தா.ராமலிங்கம். அவர் கூறுகையில், “ஓவியத் திறனை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஓவியத் திறன் கொண்ட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். கவின்கலை கற்றவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளிலும் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. கவின்கலையை கற்கும்போது பல கலைகளை கற்றுக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளைமுதல் 27ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்திருக்கிறது.
12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மீண்டும் தனித்தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி நாளைமுதல் 27ஆம் தேதிவரை மாவட்டவாரியாக அரசு தேர்வுத்துறை சேவைமையம் மூலமாக மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்திருக்கிறது. மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்றும் அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்திருக்கிறது.
விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6ஆம் தேதிமுதல் 19ஆம் தேதிவரை நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது. +2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் துணைத்தேர்வை எழுத விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் வீடு தேடி சென்று ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் மேல் நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி என்று மொத்தம் 88 பள்ளிகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெறுந்தொற்று பாதிப்பால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறக்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

பள்ளி திறக்காமல் இருப்பதால், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சில பகுதிகளில் நெட்வொர்க் பிரச்னை எழுவதால் சிக்கல் உருவாகியுள்ளது. அந்தவகையில் வால்பாறை மலை பகுதியில் அதிகமாக நெட்வொர்க் பிரச்னை உள்ளது. இதனால் அப்பகுதி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துக்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இவர்களின் சிக்கலை உணர்ந்து, அப்பகுதி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடு தேடி சென்று ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். குறிப்பாக வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இது நடக்கிறது. இங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 80 மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோணா தடுப்பு நடவடிக்கை ஒருபக்கம் இருந்தாலும், நெட்வொர்க் பிரச்னை காரணமாக இவர்கள் கல்வி கற்க முடியாமல் வீட்டில் இருந்து முடங்கி இருக்கிறார்கள்.

இதனால் மாணவர்கள் வீட்டுக்கே நேரடியாக சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கராணி, முத்துலட்சுமி உள்ளிட்ட சிலர், கொட்டும் மழையில் வன விலங்கு நடமாட்டத்திலும் மாணவர்களின் வீட்டுக்கே சென்று தினமும் 1 மணி நேரம் பாடங்களை சொல்லி தருகிறார்கள். காலை 9 மணிக்கு பள்ளிக்கு வருவது போல மாணவர்களின் வீடுகளை தெரிந்து கொண்டு அவர்கள் வீட்டுக்கு சென்று வீட்டின் திண்ணையில் அப்பகுதியில் உள்ள மாணவர்களை வரவழைத்து பாடங்களை சொல்லி தருகிறார்கள் இவர்கள். இதனால் மாணவ மாணவியரின் பெற்றோர் மிகவும் மகிழ்ந்து, ஆசிரியர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
– ம.சேது மாதவன்