Karan

Social Activist • Writer • Lyricist • Publisher • Media Person • Philosopher • Creator • Designer

சுஷாந்த் மரணத்துக்கு நீதி வேண்டி மெழுகுவர்த்தி போராட்டம் – கங்கணா பங்கேற்பு

கடந்த ஜூன் 14-ம் தேதி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என் பயிற்சிக் காலம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக முடிந்திருக்கலாம்: அனில் கும்ப்ளே வருத்தம்

அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக ஓராண்டு இருந்தார். விராட் கோலிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் முற்ற கடைசியில் அனில் கும்ப்ளே தன் பயிற்சியாளர் பொறுப்பைத் துறந்தார். 

அனைத்துக் கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் அனைத்துக் கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மருத்துவ கழிவுகளை இழுத்து செல்லும் குரங்குகள்: அலட்சியமாக செயல்படும் கொரோனா சிகிச்சை மையம்

தனியார் பள்ளியில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் பயன்படுத்திய உடைகள் மற்றும் மருந்து கழிவுகள் அலட்சியமாக கையாளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு கவச உடைகள் மற்றும் மருத்துவர்களின் உடைகளை குரங்குகள் வனப்பகுதிக்குள் இழுத்து செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
உதகை தனியார் பள்ளி வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் கடந்த திங்கட்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது வரை 50-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த மையத்தில் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் பயன்படுத்தும் சுய பாதுகாப்பு கவச உடைகள் (PPE kit) முறையாக அழிக்கப்படாமல் அலட்சியமாக கையாளப்படுவதாக தெரிகிறது. பயன்படுத்தப்பட்ட மருத்துவ உடைகள் முறையாக அழிக்கப்படாமல், அங்கேயே வைக்கப்பட்டிருந்ததால், அவற்றை குரங்குகள் வளாகத்தில் இருந்து வெளியே தூக்கி கொண்டு வரும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
பயன்படுத்தப்பட்ட கவச உடைகள், மாத்திரை டப்பாக்கள், ஊசிகளை குரங்குகள் வனப்பகுதிக்குள் இழுத்து செல்வது சர்சையையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் இந்த உடைகளில் இருக்கும் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினர் பயன்படுத்தும் சுய பாதுகாப்பு கவசங்களை உரிய வழிகாட்டுதல்படி அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்த மாவட்ட சுகாதார இணை இயக்குநரிடம் கேட்டபோது இது குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 12 லட்சத்தைக் கடந்தது: ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்குத் தொற்று; உயிரிழப்பு 29 ஆயிரமாக அதிகரிப்பு

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 720 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், ஆயிரத்து 129 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் மூலம் அறிய முடிகிறது.

லாக்டவுன் முடிஞ்சது, வண்டியை எடுத்துட்டு கிளம்பிய மக்கள் – நெரிசலில் ஸ்தம்பித்த பெங்களூரு!

தொடர் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

75 ஆண்டுகளில் முதல் முறை: கரோனாவால் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் இந்த முறை நேரடியாக பங்கேற்பு இல்லை

ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழுக்கூட்டம் கரோானா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகளின் தலைவர்களின் நேரடியான பங்கேற்பு இல்லாமல் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகள்… பிளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பிளஸ் டூ மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பட்டப்படிப்புகள்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில்  தொழிலாளர் மேலாண்மையில் பி.ஏ மற்றும் எம்.ஏ., தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பி.ஜி.டி.எல்.ஏ பட்டயப் படிப்பு, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் பட்டயப் படிப்புகளும் உள்ளன.
இங்கு கற்பிக்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. பட்டயப்படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்றவை. தொழிலாளர் மேலாண்மை படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித்தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கல்வித்தகுதியும் விண்ணப்பமும் 
பிளஸ் டூ  முடித்த மாணவர்கள் பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்பி வைத்துப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 200.  பட்டியல் இனத்தவருக்கு ரூ.100. சாதிச் சான்றிதழ் நகல் தேவை.  விண்ணப்பக் கட்டணத்தை  Tamilnadu Institute of Labour Studies, Chennai – 5  என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலையை  விண்ணப்பத்துடன் இணைத்து அஞ்சல் வழியில் அனுப்பிவைக்கவேண்டும். மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் படித்த  மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளர் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. வளாக நேர்காணல் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல தொழிற்சாலைகளில் மனிதவளத் துறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர் (தற்போது தொழிலாளர் உதவி ஆணையர்) மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு தொழிலாளர் மேலாண்மையில் இளங்கலை, முதுகலை  மற்றும் பட்டயப்படிப்புகளை முன்னுரிமைத் தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 
தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:
ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை), முனைவர் இரா,ரமேஷ்குமார், (உதவிப் பேராசிரியர்),  தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண்.5 காமராசர் சாலை, சென்னை – 5.  தொடர்பு எண்கள்: 044 – 28440102 / 28445778 /  9884159410
விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள்: 5.8.2020