LIC வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி எல்லாமே ஈசிதான்!

by -18 views

ஹைலைட்ஸ்:

  • எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு இனி ரொம்ப ஈசி
  • புதிய ஆப் அறிமுகப்படுத்திய எல்ஐசி

கொரோனா காலகட்டம் தொடங்கியபின் பல்வேறு தினசரி செயல்பாடுகள் ஆன்லைனுக்கு மாறிவிட்டன. கல்வி, வேலை, வங்கிப் பரிவர்த்தனைகள், ஷாப்பிங் என எல்லாமே முழுவதும் ஆன்லைனுக்கு மாறிவிட்டது.

இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, எல்ஐசி வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைனிலேயே பிரிமீயம் செலுத்த வழிவகை செய்துள்ளது.

இதற்காக ‘LIC Pay Direct’ என்ற புதிய ஆப்பையும் எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் LIC Pay Direct ஆப் இன்ஸ்டால் செய்து ஈசியாக ஆன்லைனிலேயே பிரீமியம் செலுத்திவிடலாம்.

உங்கள் பணத்துக்கு ஆபத்து.. இதை செய்யாதிங்க.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
இந்த LIC Pay Direct ஆப் எல்ஐசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆப் என்பதால் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் தேவையில்லை. பிரிமீயம் செலுத்துவது மட்டுமல்லாமல் வேறு சில அம்சங்களும் இந்த ஆப்பில் இருக்கின்றன. குறிப்பாக, பிரீமியம் கட்டண ரசீதை டவுன்லோடு மற்றும் பிரிண்ட் செய்வதற்கான வசதிகளும் உள்ளன.

LIC Pay Direct ஆப்பை பயன்படுத்த விரும்புவோர் உங்கள் மொபைலில் கூகுள் ஸ்டோருக்கு சென்று நேரடியாகவே ஈசியாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்த தொடங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *