கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இந்த 21-ம் நூற்றாண்டில், கல்வியின்றி வாழும் எந்த மனிதனையும் நடமாடும் பிணமாகத்தான் கருதவேண்டும். கல்வி என்பது அழிவு காணாத ஒரு வரப்பிரசாதம். கல்வி  கொள்ளையடிக்க முடியாத பொக்கிஷம்; உயிர் உள்ளவரை நிலைத்திருக்கும் செல்வம். பணத்தை திருடிவிடலாம், மனிதர்களை கொன்றுவிடலாம், இயற்கையை அழித்து விடலாம். ஆனால், தீ, வெள்ளம், நிலநடுக்கம் என எந்த சக்தி வந்தாலும், கல்வியை அழிக்கவே முடியாது. அதனால்தான், “வெள்ளத்தால் போகாது; வெந்தனலால் வேகாது” என்று பாடினார் ஒரு புலவர். இன்று எல்லா வேலை இடங்களிலும் கல்வியறிவு பெற்றிருக்கும் ஒருவரைத்தான் முதலாளிகள் எதிர்பார்க்கின்றனர். நாம் எவ்வளவு நாட்கள் அத்துறையில் பாடுபட்டிருக்கிறோம் என்பதைவிட, எப்படி வேலை செய்கிறோம் என்பதையே முதலாளிகள் பார்க்கிறார்கள். இன்று, ஒரு பட்டதாரிக்கு வேலை கிடைப்பது கடினமாக உள்ளது. இச்சூழலில் கல்வி இல்லாத ஒருவன் நிலை என்னவாகும்? பணமும், பிற செல்வங்களும் ஒரு மனிதனுக்கு மரியாதை தேடி தருவதில்லை. ஆனால், கல்வியிடம் மட்டுமே மரியாதை தேடித்தரும் இயல்பு இருக்கிறது. சமுதாயத்தில் பேரும், புகழும் உள்ளவர்களிடம் கல்வியின் உயர்வை காணலாம். நம் முன்னோர் பலர், கல்வியால்தான் வாழ்க்கையில் முன்னேறினர். கல்வி ஓர் அற்புத சாதனம். கல்வியால் நாம், உயிர்களை காப்பாற்றலாம். மலையைவிட உயர்ந்த நிலையில் கட்டிடங்களை கட்டலாம். மின்னல் வேகத்தில் பணிகளை செய்யலாம். புதிய நாட்டையே கூட அமைக்கலாம். ‘’கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’’. எனவே, நாம் கற்ற கல்வி உயர்ந்தால்,  நாடும்  உயரும். கல்வியை சுமையாக கருதாமல், பல நன்மைகளை தரும் ஒரு அற்புத கருவியாக  எண்ண வேண்டும். பழைய தண்ணீரை புதிய குடிநீராக மாற்றியதுபோல், நாளை நீங்கள்  பழைய மனிதர்களை, புதிய மனிதர்களாக மாற்றலாம். கல்வியே  புதுமைக்கு வழி  வகுக்கும். கற்றலே வாழ்வுக்கு நலமளிக்கும்.

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெறும் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான கே.விவேகானந்தன் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் www.tndte.gov.in/site என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.20. தேர்வுக் கட்டணம் ஜுனியர் தேர்வுக்கு ரூ.65, சீனியர் தேர்வுக்கு ரூ.85. இண்டர் தேர்வுக்கு ரூ.80, ஹைஸ்பீடு தேர்வுக்கு ரூ.130 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கட்டணத்துக்கான செலான் மற்றும் இதர ஆவணங்களுடன் மார்ச் 26-க்குள் நேரில் அல்லது தபால் மூலம் ‘தலைவர்,தேர்வு வாரியம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், கிண்டி, சென்னை – 600025’ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். அபராதக் கட்டணம் ரூ.5 செலுத்தி மார்ச் 30 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 044-22351018, 22351014 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.’ என கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட லட்சியத்தோடும் ஆர்வத்தோடும் படிக்கும் இந்திய மாணவர்கள் தங்கள் முதுநிலை கல்வியை அமெரிக்காவில் தொடர விரும்பும் நிலையில் அவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக, கொண்டுவரப்பட்டது தான் ‘புல்பிரைட் நேரு மாஸ்டர்ஸ் ஃபெல்லோஷிப்’ என்ற கல்வி உதவித்தொகை திட்டம். உலகின் ஆராய்ச்சி உதவி திட்டங்களில் பிரசித்திபெற்ற இந்த புல்பிரைட் உதவித்தொகை திட்டம் 1950ம் ஆண்டு, அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் யு.எஸ். தூதர் லோய் டபிள்யூ. ஹென்டர்சன் ஆகியோரால் கையெழுத்திட்டப்பட்டது. சர்வதேச அளவில் அதிக ஆராய்ச்சி மாணவர்கள் பங்குபெறும் திட்டமாகவும் புல்பிரைட் உதவித்தொகை திட்டம் விளங்குகிறது.  கல்வியில் சிறந்த இந்திய மாணவர்களுக்கு, அமெரிக்க- இந்திய கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எப்.,) இந்த கல்வி உதவித்தொகையை வழங்குகின்றது. தற்போது 2022-23ம் ஆண்டிற்கான பல்வேறு புல்பிரைட் உதவித்தொகை திட்டங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

யு.எஸ்.ஐ.இ.எப்., செயல்படும் இடங்கள்: இத்திட்டத்தை நிர்வகிக்கும் யு.எஸ்.ஐ.இ.எப்., இந்தியாவில், புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்படுகிறது. தகுதிகள்: அரசு அங்கீகாரம் பெற்ற இந்திய கல்வி நிறுவனத்தில் இளநிலை அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக நான்கு ஆண்டு இளநிலை படிப்பைப் படித்தவராகவும் இருக்க வேண்டும். அதற்குக் குறைவான கால அளவை கொண்ட படிப்பு என்றால் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்திருக்க வேண்டியது அவசியம். துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 3 ஆண்டு முழுநேர பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு முன் அமெரிக்காவில் எந்த உயர்கல்வியும் படித்திருக்கக் கூடாது.பாடப் பிரிவுகள்: சில குறிப்பிட்ட பாடப் பிரிவுகளின்கீழ் முதுநிலைப் பட்டப்படிப்பைப் பயில விரும்பும் மாணவர்களுக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அவை: கலாசார பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியக ஆய்வுகள் உட்படக் கலை படிப்புகள், பொருளாதாரம்,  சுற்றுச்சூழல் அறிவியல், உயர்கல்வி நிர்வாகம், சர்வதேச விவகாரம், சர்வதேச சட்டம், இதழியல், பொது நிர்வாகம், பொது சுகாதாரம், நகர்ப்புறம் மற்றும் பிராந்திய திட்டமிடல், மகளிர் மற்றும் பாலினம் சார்ந்த படிப்புகள் போன்ற ஏதேனும் ஒரு துறையில், மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பை தேர்வு உதவித்தொகை: ஜெ-1 விசா, அமெரிக்க வந்து செல்வதற்கான விமான பயணச் சீட்டு, கல்விக் கட்டணம், இதர வசிப்பிட செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.குறிப்பு: வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ.,), பொது நிர்வாகம் (எம்.ஏ., அல்லது எம்.எஸ்), இரட்டை பட்டப்படிப்பான எம்.ஏ.,/எம்.பி.ஏ., எம்.ஏ.,/எம்.எஸ்., மற்றும் எம்.ஏ.,/எம்.பி.பி., போன்றவற்றை தேர்வு செய்யும் இந்திய மாணவர்களும் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை http://www.usief.org.in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாக படித்து குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சரியாக இணைக்க வேண்டியது அவசியம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.5.2021.

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டிப்ளமோ/ பி.இ. படித்தவர்களுக்கு அப்ரன்டிஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி விவரம்:1. Mechanical: 85 இடங்கள் (பொது-32, பொருளாதார பிற்பட்டோர்-8, எஸ்சி-13, எஸ்டி-6, ஓபிசி-26)2. Chemical: 20 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-3, எஸ்டி-1, ஓபிசி-6).3. Electrical: 40 இடங்கள் (பொது-15, பொருளாதார பிற்பட்டோர்-4, எஸ்சி-6, எஸ்டி-3, ஓபிசி-12).4. Electronics: 28 இடங்கள். (பொது-23, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1, எஸ்டி-1, ஓபிசி-2).5. Instrumentation: 7 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1, ஓபிசி-2)6. Civil: 35 இடங்கள். (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-3, எஸ்சி-6, எஸ்டி-3, ஓபிசி-10).7. Industrial & Fire Safety: 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஓபிசி-2).அந்தந்த பயிற்சிக்கு ஏற்ற பாடப்பிரிவுகளில் பி.இ.,/பி.டெக்/பி.எஸ்சி (இன்ஜினியரிங்) 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி. கேட்-2018, கேட்-2019, 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்பதாரர்கள் www.npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கேட் தேர்வின் பதிவு எண் மற்றும் மதிப்பெண்ணை இணைக்கவும்.விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500 (எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது). விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.4.2021.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட், பெர்சனல் அசிஸ்டென்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஜூனியர் இன்ஜினியர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஸ்டெனோகிராபர், லைப்ரரி அட்டெண்டென்ட், லேப் அட்டெண்டென்ட், மெடிக்கல் ஆபீசர், செக்யூரிட்டி ஆபீசர், நர்ஸ், சீனியர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட 1145 பணியிடங்கள் காலியாக உள்ளன.தகுதி:10ம் வகுப்பு/பிளஸ் 2/டிப்ளமோ/ பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித்தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, இடஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.recruitment.nta.nic.in என்ற இணையதளத்தை பார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1000. ஓபிசி மற்றும் பொருளாதார பிற்பட்டோர் மற்றும் பெண்களுக்கு ரூ.800. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.3.2021.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2900 கள உதவியாளர் (பயிலுநர்) (Field Assistant (Trainee) பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ம் வகுப்பு முடித்து ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதி: Electrician/ Wire man /Electrical டிரேடில் ஐடிஐ தேர்ச்சி. 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 1.7.2020 தேதிப்படி 18 முதல் 30க்குள். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/விதவைகளுக்கு 5 ஆண்டுகளும், எம்பிசி/முஸ்லிம் ஆகியோருக்கு 2 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ₹1000. எஸ்சி, அருந்ததியர், எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு ₹500. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்தேர்வு செய்யும் முறை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு/உடல் தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்பதாரர்கள் www.tangedco.gov.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.3.2021.