IPO: இன்றுடன் முடியும் 3 ஐபிஓ.. முழு லிஸ்ட்

by -371 views

இன்று ஒரே நாளில் மூன்று ஐபிஓக்கள் முடிவுக்கு வருகின்றன. பாலிசிபஜார், எஸ்ஜேஎஸ் எண்டர்பிரைசஸ், சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் ஐபிஓ இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. இதுகுறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ்

சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் (Sigachi Industries) QIB பிரிவில் 3.36 மடங்கும், NII பிரிவில் 30.08 மடங்கும், RII பிரிவில் 52.64 மடங்கும் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 161 முதல் 163 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபிஓவின் மதிப்பு 125.43 கோடி ரூபாய். ஒரு லாட்டுக்கு 90 பங்குகள். மும்பைப் பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை இரண்டிலுமே சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் பட்டியலிடப்படுகிறது.

எஸ்ஜேஎஸ் எண்டர்பிரைசஸ்

எஸ்ஜேஎஸ் எண்டர்பிரைசஸ் (SJS Enterprises) ஐபிஓ QIB பிரிவில் 0.12 மடங்கும், NII பிரிவில் 0.08 மடங்கும், RII பிரிவில் 1.12 மடங்கும் சப்ஸ்கிரப் செய்யப்பட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 531 முதல் 542 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை இரண்டிலுமே பட்டியலிடப்படுகிறது.

தபால் அலுவலகத்தில் புதிய சேவை.. இனி இதுவும் கிடைக்கும்!
பாலிசிபஜார்

பாலிசிபஜார் ஐபிஓ (PolicyBazaar) QIB பிரிவில் 02.72 மடங்கும், NII பிரிவில் 0.61 மடங்கும், RII பிரிவில் 2.72 மடங்கும் சப்ஸ்கிரப் செய்யப்பட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 940 முதல் 980 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பைப் பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை இரண்டிலுமே பட்டியலிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *