Gold price: பங்கமாக உயரும் தங்கம் விலை!

by -26 views

தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று காலையில் விலையேற்றம் இருந்தது. இந்நிலையில் மேலும் அதிர்ச்சி தரும் விதமாக, தற்போது மாலை நேரத்திலும் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (அக்டோபர் 19) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,465 ஆக இருந்தது. மாலையில் அது 4,484 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, காலையில் 35,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 152 ரூபாய் உயர்ந்து 35,872 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சிலிண்டர் மானியம் இனி கிடைக்காது? பொதுமக்கள் ஷாக்!
தூய தங்கத்தின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இன்று காலை 4,829 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,848 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, காலையில் 38,632 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 152 ரூபாய் உயர்ந்து 38,784 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.67.80 ஆக இருந்தது. மாலையில் அது ரூ.68.60 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 68,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *