Gold price: சர்பிரஸ் கொடுத்த தங்கம் விலை!

by -26 views

தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இதனால் நகை வாங்குவோர் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில், இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு 224 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது மாலை நேரத்திலும் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (அக்டோபர் 27) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,508 ஆக இருந்தது. மாலையில் அது 4,500 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, இன்று காலை 36,064 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 64 ரூபாய் குறைந்து 36,000 ரூபாய்க்கு வந்துள்ளது.

Gold rate: ராக்கெட் வேகத்தில் குறைந்த தங்கம் விலை… உடனே கடைக்கு ஓடுங்க!!

தூய தங்கத்தின் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4,872 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,864 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, காலையில் 38,976 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 64 ரூபாய் குறைந்து 38,912 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.69.20 ஆக இருந்தது. மாலையில் அது ரூ.68.90 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 68,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *