அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மேலும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்களின் ஒரு செய்தியைப் படிப்பது, வீடியோவைப் பார்ப்பது, கருத்து தெரிவிப்பது, பகிர்வது மற்றும் பிரௌஸ் செய்தல் போன்ற செயல்பாடுகள் எங்கள் வலைத்தளங்களில் உங்கள் ஈடுபாட்டின் அடிப்படையில் டைம் பாய்ண்ட்ஸ்களாக உங்கள் கணக்கில் ‘புள்ளிகளாக’ வரவு வைக்கிறது.

சென்னையில் இன்று தக்காளி விலை பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.

இந்தியாவின் புதிய சமூக வலைதள கட்டுப்பாடுகளை ஏற்றப்பின் 30 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக வாட்ஸப் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.902.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர் ஒன்றின் விலை 875 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக அதிகரித்துள்ளது.  வணிக அளவில் பயன்படுத்தபப்டும் சமையல் எரிவாயு விலை ரூ.75 உயர்ந்து ரூ.1,831க்கு விற்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.285 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சிலிண்டரின் விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 25 ரூபாய் அதிரடியாக உயர்த்தி மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்படத்தக்கது. மூன்று மாத காலத்திற்கு பின் கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயு விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதமும் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.