சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு..

ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் தனி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தாலும், அதன் சொந்த ஃபோனுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இந்த நிலையை மாற்றும் உத்தேசத்தோடு, கூகுள் தனது பிக்சல் (PIXEL) ஃபோன் வரிசையில் அடுத்த அறிமுகம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
‘பிக்சல் 6’ மற்றும் ‘பிக்சல் 6 ப்ரோ’ ஆகிய இந்த இரண்டு புதிய ஃபோன்களும், சந்தையில் அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்றாலும், இவற்றின் முதல் கட்ட அறிமுகங்கள் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்றாலும், ‘பிக்சல் 6’ போன்கள் தொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் ஈர்ப்புடையதாகவே இருக்கின்றன.

முதல் விஷயம், வடிவமைப்பிலும் தோற்றத்திலும் புதிய பிக்சல் ஃபோன் அசத்தலாக இருப்பதாக ‘தி வெர்ஜ்’ இணையதளம் தனது பிரத்யேக செய்தியில் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கமான கேமரா அமைப்புக்கு மாறாக, நீளப் பட்டையில் இதன் மூன்று கேமராக்கள் அமைந்திருப்பதும் விஷேசமாக சொல்லப்படுகிறது.
பக்கவாட்டில் லேசாக வளைந்த திரை, கைரேகை சென்சார், டைட்டன் பாதுகாப்பு சிப் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டிருந்தாலும், பிற நிறுவன சிப் இல்லாமல் சொந்த ‘சிப்’புடன் இந்த ஃபோன் உருவாகி இருப்பதே முக்கிய அம்சமாக சொல்லப்படுகிறது.
கூகுள் சொந்த சிப் உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பது பற்றி செய்திகள் கசிந்து கொண்டிருந்தாலும், பிக்சல் ஃபோனில் இந்த முறை டென்சர் எஸ்.ஒ.சி (Tensor SoC) எனும் புதிய சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காமின் ஸ்னேப்டிராகன் சிப்பை கூகுள் பயன்படுத்தவில்லை. மாறாக, சொந்த சிப்புடன் களமிறங்குகிறது.

ஸ்மார்ட்போன் உலகில் இது முக்கிய நகர்வு என்கின்றனர். இதனால் குவால்காமுக்கு பெரிய இழப்பு உண்டாகும் என்று சொல்ல முடியாவிட்டாலும், கூகுளுக்கு இது மிகப்பெரிய கணக்குகளை உள்ளடக்கிய விஷயமாகவே இருக்கிறது.
ஏனெனில், ஸ்மார்ட்போனில் ஆப்பிளை எட்டிப்பிடிக்கும் கூகுள் முயற்சியின் ஓர் அங்கமாக இது அமைகிறது. ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் ஏகப்பட்ட பிராண்டுகள் இருந்தாலும், உயர் ரக ஃபோன் பிரிவில் ஆப்பிளின் ஐஃபோன் தான் கொடிகட்டிப் பறக்கிறது. சாம்சங் போன்ற நிறுவனங்களும் உயர் ரக ஃபோனோடு ஆப்பிளுடன் மல்லுக்கட்டினாலும், ஐஃபோன் அந்தஸ்திலும் சரி, செயல்திறனிலும் சரி பல படிகள் மேல்தான் இருக்கிறது.
அதுமட்டும் அல்லாமல், பாதுகாப்பு அம்சத்திலும், பிரைவசி விஷயத்திலும் ஆப்பிள் ஒரு படி மேலே இருக்கிறது. புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதிலும் அசத்தி விடுகிறது. இதனிடையே ஐஃபோன் 13-ல் ஆப்பிள் என்ன எல்லாம் கொண்டு வருமோ எனும் எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இந்தப் பின்னணில், ஸ்மார்ட்ஃபோன் வன்பொருள் என்று வரும்போது கூகுளின் பிக்சல் ஃபோன்கள் இடைப்பட்ட ரகமாகவே பார்க்கப்படுகிறது. அசத்தலான கேமரா தரம், ஏ.ஐ அம்சங்கள் என பிக்சல் போனில் கூகுள் என்ன எல்லாம் செய்து பார்த்தாலும், ஐஃபோன் கோட்டையை அதனால் அசைக்க முடியவில்லை.

ஐஃபோனுடனான இடைவெளியை இயன்ற அளவு குறைக்கும் வகையில், அடுத்த பிக்சல் ஃபோனை கூகுள் தயார் செய்துள்ளதாக கொள்ளலாம். இந்த நோக்கில்தான் கூகுள் பிற நிறுவன சிப்பை நாடாமல் சொந்த சிப்பை பயன்படுத்தியுள்ளது.
நவீன ஃபோன்கள் என்று வரும் போது, அவற்றின் சிப் தான் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைகிறது. ஃபோனின் வேகம், செயல்திறன், பேட்டரி ஆயுள் உள்ளிட்ட அம்சங்களை சிப்பே தீர்மானிக்கிறது.
ஸ்மார்ட்போனின் மூளை என்று வர்ணிக்கப்படும் சிப் விஷயத்தில் ஆப்பிள் பிற நிறுவனங்களை சார்ந்திராமல், தானே சொந்த சிப்பை உருவாக்கியிருக்கிறது. வன்பொருள், மென்பொருள், சிப் என எல்லாமே சொந்த தயாரிப்பாக இருப்பது ஆப்பிள் ஐபோனை முழுமையான போனாக அளிப்பதில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
இந்த காரணங்களினால்தான் கூகுளும் சொந்த சிப்புடன் பிக்சல் போனை களமிறக்குகிறது. டென்சர் எஸ்.ஒ.எஸ் எனப்படும் இந்த சிப் வழக்கமான ஒற்றை சிப்பாக அமையாமல், சிப் மேல் கொண்ட அமைப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்களை கூகுள் ரகசியமாக வைத்திருப்பதால் ஃபோன் அறிமுகம் ஆகும் போதுதான், இதன் உண்மையான ஆற்றல் தெரிய வரும் என்கின்றனர்.

ஆனால், இப்போதைக்கு டென்சர் சிப் அசத்தலாக இருப்பதாக கருதப்படுகிறது. டைடன் எம்2 பாதுகாப்பு சிப்பும் இணைந்திருப்பதால் இந்த ஃபோன் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதைவிட முக்கியமாக ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு ஆற்றலுடன் இந்த ஃபோன் புகைப்படங்களை கையாளுதல் போன்றவற்றில் கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிப்களின் ஆற்றலை தீர்மானிக்கும் மூர் விதியின் தாக்கம், அதற்கான வரம்பை தொட்டிருப்பதாக கருதப்படும் நிலையில், ஃபோன்களும், கம்ப்யூட்டர்களும் வேறு விதமாக உருவாக்கப்பட வேண்டியிருக்கும் என்கிறது. அந்த நம்பிக்கையில்தான் அது சொந்த சிப்பை உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம் பிக்சல் ஃபோனில் புதிய பாதை காணலாம் என்றும் கூகுள் எதிர்பார்க்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
– சைபர்சிம்மன்

வாட்ஸ்ஆப் நிறுவனம் ‘வியூ ஒன்ஸ்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கிறது. விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வியூ ஒன்ஸ் வசதி கிடைக்கப்பெறும் என்று, வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒருமுறை பார்க்கப்பட்ட பின்னர் சாட்டில் இருந்து மறைந்துவிடும். மேலும் பெறுபவரின் கேலரியில் புகைப்படமோ, வீடியோவோ சேமிக்கப்படாது. இதுதவிர, வாட்ஸ்ஆப்பின் வழியாக மற்றொருவருக்கும் அவற்றை அனுப்ப முடியாது. புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்புவதற்கு முன்னதாக, கேப்ஷன் பார் அருகில் தோன்றும் ஒன்று என்ற ஐகானை பயன்படுத்துவதன் மூலம் வியூ ஒன்ஸ் வசதியை பயன்படுத்த முடியும்.

ரியல்மி நிறுவனத்தின் டிஸோ பிராண்ட் பட்ஜெட் விலையில் முதல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 6 முதல் ஆன்லைன் மூலமாக விற்பனையை தொடங்க உள்ளது அந்நிறுவனம். அதையடுத்து ரீடெயில் சந்தைகளிலும் விற்பனைக்கு வர உள்ளது. 
3.5 சென்டிமீட்டர் ஹை-ரெசல்யூஷன் தொடுதிரை வசதி, 90 விதமான ஸ்போர்ட்ஸ் மோட், பன்னிரெண்டு நாட்கள் வரை நீடித்து நிற்கக்கூடிய பேட்டரி திறன், லைவ் வாட்ச் ஃபேஸஸ், ஆரோக்கிய நலன் மற்றும் ஃபிட்னஸ் மானிட்டரிங் வசதி, வாட்டர் ஃப்ரூப் மாதிரியானவை இதில் இடம் பெற்றுள்ளன. 
இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை 3,499 ரூபாய். பிளிப்கார்ட் மூலம் ஆர்டர் செய்தால் 500 ரூபாய் தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.
நியாயமான விலையில் சிறந்த ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்வதில் டிஸோ பிராண்ட் மகிழ்கிறது. எங்களது தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் கிடைத்த வரவேற்பே இதற்கு காரணம் எனவும் டிஸோ இந்தியா தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இ-ருபி என்ற பெயரிலான புதிய மின்னணு பணப்பரிவர்த்தனை முறையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
ரொக்கப் பணப்பரிவர்த்தனையை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம், சேவை வழங்குவோரையும், சேவை பெறுவோரையும் மின்னணு முறையில் இணைக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.அரசின் நலத்திட்டங்கள் உரியோருக்கு சென்று சேர இ-ருபி முறை வெகுவாக உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டப்படி பயனாளிகள் இணையவழியில் முன்கூட்டியே பணத்தை செலுத்தினால் அதற்கான வவுச்சர் எனப்படும் ரசீது எஸ்எம்எஸ் அல்லது க்யூ ஆர் கோடு குறியீடு வடிவில் அனுப்பப்படும். பின்னர் எந்த இடத்தில் பணம் செலுத்த தேவையிருக்கிறதோ அங்கு இந்த வவுச்சர்களை கொண்டு செலுத்தலாம். பணம் செலுத்த டெபிட், கிரெடிட் கார்டு, மொபைல் ஆப் போன்ற எதுவும் அவசியமில்லை. மொபைல் ஃபோன் கையில் இல்லாவிட்டாலும் வவுச்சர் எண் விவரம் இருந்தால்கூட பணம் செலுத்திவிட முடியும்.