நோக்கம் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் சங்கம் (TANSTIA) ஜெர்மனியில் உள்ள பிரடெரிக் நாமன் பவுண்டேஷன் (FNF) இரண்டும் இணைந்து சிறு மற்றும் குறுந்தொழில்களின் மேம்பாடு மற்றும் தொழில் முனைவர்களுக்கான சேவைகளை அளிக்க தொடங்கப் பட்டதுதான் டான்ஸ்டியா–எஃப்.என்.எஃப் சேவை மையம். புதிய பொருளாதார வர்த்தகத்தில் தொழில்முனைவர்கள் பல நாடுகளில் உள்ள வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ப இந்த நிறுவனம் தகவல்களை அளித்து வருகிறது. 1992-ல் இந்த நிறுவனம் தொடங்கப் பட்டது. உலக அளவில் பல நாடுகளில் இந்த சேவை மையம் இயங்கி வருகிறது. இந்தியாவில் சென்னையில் மட்டுமே இருக்கிறது. தொழில் தொடங்குவது தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் இந்த அமைப்பு தீர்த்து வைக்கிறது. மேலும் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும் பங்களிப்பு செலுத்துகிறது. ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் உள்ளவர்களுக்கு ஆலோசனை முதல் பயிற்சி, நிதி உதவிக்கான வழிகாட்டுதல், தொழில் நிறுவனத்தை அமைப்பதற்கான அனுமதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளை ஒருங்கிணைத்து கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது. தொழில் முனைவர் நேரில்தான் வரவேண்டும் என்கிற அவசியமில்லை. கடிதம் மூலமாகக்கூட தங்களது சந்தேகங்களைக் கேட்கலாம். தொழில் தொடங்குவதற்குத் தேவையான மூலப்பொருள் எங்கு கிடைக்கும், சந்தைப்படுத்துவது எப்படி, இயந்திரங்கள், அவற்றின் விலை, தொழில் நுட்பம், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்ட தகவல்களை இந்த அமைப்பு கொடுக்கிறது. தொழில் முனைவர்களுக்கு முதற்கட்டமான ஆலோசனை வழங்க துறை சார்ந்த தொழில் ஆலோசகர்கள் சுமார் 280 பேர் இந்த அமைப்பில் உள்ளனர். இவர்கள் மூலம் தொழில் ஆலோசனை வழங்கி வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தகவல் உதவிகள் கொடுக்கப்படுகின்றன. வருமான வரி, விற்பனை வரி, ஐ.எஸ்.ஓ சான்றிதழ், டிரேட் மார்க் பதிவு போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உதவி செய்கிறது. புதிய தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடர்பான திட்ட அறிக்கை, அவர்களை தொடர்ந்து ஊக்குவிப்பது, தொழில்நுட்ப உதவிகள், நிதி ஏற்பாடுகளுக்கு உதவியும், மானியம் தொடர்பான வழிகாட்டுதல், நிர்வாகம், சந்தையிடல் போன்ற விவரங்களில் உதவிகள் செய்து வருகிறது. காப்புரிமை, சுற்றுச்சூழல் அனுமதிகள், வர்த்தக புள்ளிவிவரம் என அனைத்து சேவைகளும் இந்த அமைப்பு செய்து தருகிறது. ஆலோசனை மற்றும் பயிற்சிகளுக்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் திட்ட அறிக்கையும் குறைவான கட்டணத்திலேயே தயாரித்து வழங்குகின்றனர். சுமார் 400க்கு மேற்பட்ட தொழில்களுக்கு திட்ட அறிக்கை இந்த அமைப்பிடம் உள்ளது. இந்த அமைப்பின் மூலம் கீழ்க்கண்ட தொழில்களுக்கான ஆலோசனை மற்றும் உதவிகள் கிடைக்கும். தொழில்கள் மற்றும் திட்ட அறிக்கைகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தவிர தனிநபர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு ஏற்ப பயிற்சிகள் 1. செல்போன் சர்வீஸ் 2. லேப்டாப் சர்வீஸ்

அரசாணை எண் 39 அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000 பள்ளிக் கல்வி – அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்

  அறிமுகம் மத்திய அரசின் ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகச் சந்தையோடு போட்டி போடும்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான

அன்பான தோழர்களே!இதோ நான் கொஞ்சம் கொஞ்சமாக எனது எண்ணங்களை உருவேற்றிக்கொண்டேயிருக்கிறேன். அதன் அடுத்தகட்டம்தான் இந்த “இலவச சுயதொழில் பயிற்சி திட்டம்”. இத்திட்டத்தின் மூலம் நம்மால் இயன்ற அளவிற்கு ஏழை  மற்றும் மாற்றுத்திறனுடைய

நோக்கம் நம் நாட்டில் விவசாயம் முதன்மையான தொழிலாக உள்ளது. ஆனால், அதைச் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழிலில் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்திய அளவில் வெறும் 3 சதவிகிதம்

COIR UDYAMI YOJANA கயிறு தொழில் அதிக தொழிலாளர்களை கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான  விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகமானது தமிழ்நாடு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு, சிறந்த குறிக்கோள்களான சிறு அளவு தொழில்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தையும் மற்றும் மாநிலத்தில் பின் தங்கிய மற்றும் முன்னேற்றமில்லாத

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான