Crime

Crimes & Offence

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இருவர் கைது.. போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

பேர்ணாம்பட்டில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அருகே மத்தூர் பகுதியை சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் 16 வயது மகள் பத்தாம் வகுப்பு முடித்த நிலையில் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் (18) மற்றும் பிரதாப் (34) ஆகிய இருவரும் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்து செய்துள்ளனர். இதில் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இது குறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என சிறுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் சிறுமியின் பெற்றோர் அன்பரசன் மற்றும் பிரதாப் ஆகிய இருவர் மீதும் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அன்பரசன் மற்றும் பிரதாப் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

”கன்னத்தில் அறைந்த ரவுடி”- 6 மாதம் கழித்து ரவுடியின் கன்னத்தையே வெட்டி எடுத்த நபர்

கன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தையே வெட்டி எடுத்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நங்கநல்லூர், பிவி.நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(27). இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த ராபின் ராஜா(24). இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரபாகரன் கன்னத்தில் அறைந்தது மட்டுமன்றி அடிக்கடி வீண் விதாண்ட வாதங்களை செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராபின் ராஜா, பிரபாகரனை கடந்த 10ம் தேதி இரவு பேச்சுவார்த்தைக்கு வரவழைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்து தப்பியோடியுள்ளார்.
 
இச்சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீசாருக்கு 11ம் தேதி காலை அப்பகுதி பொது மக்கள் தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்தது யார் என கண்டறிய பழவந்தாங்கல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் சுரேஷ், பன்னீர் செல்வம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் ராபின் ராஜாவிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் “ முன் விரோதம் காரணமாகவும், தனது உறவினர் ஒரு பெண்ணுடன் பிரபாகரன் தவறான தொடர்பு வைத்திருந்தாகவும் அதனை கைவிட பலமுறை வலியுறுத்தியும் கேட்காததால் அவரை நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாகவும் கூறினார்.
இதனையடுத்து பம்மலை சேர்ந்த ஆகாஷ்(22), பிரபு(22), நங்கநல்லூரை சேர்ந்த ஒளிவராஜா(21), பார்த்திபன்(21), ராஜ்குமார்(21), பல்லாவரத்தை சேர்ந்த அருண்(21), ஆகிய 7 பேரை கைது செய்த பழவந்தாங்கல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அனைவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொரோனா நோயாளியின் உடலைத் தின்ற நாய்கள் – ஆந்திராவில் அதிர்ச்சி !!

ஆந்திராவில் பிரகாசம் மாவட்டம் ஜருகுமல்லி பகுதியில் பித்ரகுண்டா கிராமத்தில் வசித்தவர் காந்தா ராவ். ஓங்கோலில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தில்(ரிம்ஸ்) வீடற்றோர் மற்றும் ஏழைகள் தங்குமிடமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் தங்கியிருந்தார். அங்கு அவரது சடலத்தை நாய்கள் கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மருத்துவமனை பாதுகாப்புப் பணியாளர்கள் நாய்களை விலக்கி பார்த்ததில் அவர் இறந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதை கண்டறிந்தனர். அவரது முகத்தையும், காதுகளையும் நாய் மென்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 
ரிம்ஸ் மருத்துவமனை அலட்சியத்தால் இது நடந்ததாக காந்தா ராவின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ராவின் குடும்பத்தினர் கூறுகையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி அவர் அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அவரை நோயாளியாக மருத்துவமனையில் சேர்க்கவில்லை. மருத்துவமனை அவரை அனுமதிக்க மறுத்தது ஏன்? எந்த சிகிச்சையும் இல்லாமல் 5 நாட்களாக கொட்டகையில் தங்கவைக்கப் பட்டது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
காந்தா ராவ் மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை. அவர் வெளி நோயாளி என்பதற்கான எந்த பதிவும் இல்லை. கொரோனா சோதனையில் தொற்று உறுதியானதை அடுத்து, ஆகஸ்ட் 5ஆம் தேதி, அவரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுவந்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஆனால் வீடற்றவர்கள் தங்கியிருக்கும் பழைய கேண்டீன் கொட்டகையில் தங்கவைக்கப் பட்டிருக்கிறார் என்று மருத்துவர் ஸ்ரீராமுலு கூறியிருக்கிறார்.

காந்தா ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா அல்லது அவர் சிகிச்சை மறுத்து வெளியே சென்றுவிட்டாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, இறந்த உடலின் வீடியோவை பகிர்ந்ததோடு, ‘மனித நேயத்தின் கடுமையான மீறல்’ என்றும், ஜெகன் மோகன் அரசின் மேனேஜ்மென்ட் தோல்வி என்றும் கூறியுள்ளார்.

ஒரு நாளைக்கு எத்தனை இழப்புகள்! சென்னையில் ஷாக் அடித்து 4 வயது சிறுவன் பலி…

சென்னை அருகே வெட்டப்பட்ட ஒயரை தொட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிற்குள் சிக்கிய பெரிய ராஜ நாகம் – திகிலூட்டும் வீடியோ

பாம்பு என்றாலே நடுக்கமெடுக்கும் பலருக்கு. உத்ராகண்டில் உள்ள ஒரு வீட்டில் பிடிக்கப்பட்ட ராஜநாகத்தைக் கண்டால் மெய்சிலிர்த்துவிடும். நைனிடாலில் உள்ள ஒரு வீட்டில் இருந்து விஷம் தன்மை கொண்ட பாம்பை வனத்துறையினர் கைப்பற்றிய வீடியோ திகிலூட்டும் வகையில் உள்ளது.
இந்திய வனசேவை அதிகாரி ஆகாஷ்குமார் வர்மா ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். டி.எஃப்.ஓ நைனிடாலை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். வீட்டில் மேஜையின்கீழ் படுத்திருந்த ராஜ நாகத்தை பிடிக்க பாம்பாட்டி ஒருவர் கீழே சென்று வெற்றிகரமாக பிடித்து மேலே எடுத்துச் செல்வதை அந்த வீடியோ காட்டுகிறது. பாம்பாட்டி ஒரு சாக்கில் பாம்பை வைக்கிறார். ஒரு கட்டத்தில் அது வெளியே வந்து அவரின் கழுத்தை சுற்றத் தொடங்குகிறது. இது பார்ப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

A #King Cobra rescued by Forest Department’s Rapid Response Team from a house at Nainital! ?DFO Nainital. @moefcc @ndtv @CentralIfs @AnimalsWorId @Uttkhand_Forest @nature @Discovery @MadrasCrocBank @REPTILESMag @mygovindia @MygovU @uttarakhandpost @ndtvindia @ZeeNews @dodo @IUCN pic.twitter.com/kXWameDNzf
— Akash Kumar Verma, IFS. (@verma_akash) August 11, 2020
ஆன்லைனில் இந்த வீடியோவை பதிவிட்டவுடன் 3,500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், ‘மெய்சிலிர்க்க வைக்கிறது’, ‘தைரியமான அர்ப்பணிப்புள்ள டீமிற்கு பெரிய வணக்கம்’ என்பது போன்ற வியக்கத்தக்க கருத்துகளையும் பெற்றுள்ளது.
மேலும் பாம்பை காட்டில் விட்ட மற்றொரு வீடியோவையும் வர்மா வெளியிட்டுள்ளார்.

Release of the #King #Cobra in it’s natural habitat. @moefcc @UttarakhandIFS @uttarakhandpost @CentralIfs @dodo @UNBiodiversity @MadrasCrocBank @REPTILESMag pic.twitter.com/kfmECfLLFT
— Akash Kumar Verma, IFS. (@verma_akash) August 11, 2020
 

கைலாசா கரன்சி, வரும் 22ஆம் தேதி அறிமுகம்- நித்தி அறிவிப்பு?

கைலாசா என்ற நாடு உள்ளதாகவும் விரைவில் உலகில் எந்த இடத்தில் அது உள்ளது என்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என நித்தியானந்தா கூறியிருந்தார்.

எஸ்வி சேகர் கைது குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர், பதில்!

பாஜக உறுப்பினர் எஸ்வி சேகரைக் கைது செய்து, அவரின் ஆசையை அரசு நிறைவேற்றும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில், சென்னை கமிஷ்னர் விளக்கம் அளித்துள்ளார்.