National

India News

பொதுவுடைமை பூமிக்குப் புரியாதா? கேரள அரசுக்கு வைரமுத்து கேள்வி

மூணாறு நிலச்சரிவு சம்பவத்தில் கேரள அரசு உரிய மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இழப்பீடு வழங்கவேண்டும் என வைரமுத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “விமான விபத்து மீட்சியைத் திறம்பட நிகழ்த்திய கேரள ஆட்சியைப் பாராட்டுகிறோம். அதேபோல் மண்ணில் புதைந்த மக்களுக்கும் விரைந்த மீட்பும் தகுந்த காப்பும் வழங்க வேண்டுகிறோம். வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்; மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்பது பொதுவுடைமை பூமிக்குப் புரியாதா என்ன?” என்று கூறியுள்ளார்.

கரோனா வைரஸ்: 10,000 சோதனைகளின் போது 3000-3,500, இப்போது 75,000 சோதனைகள் ஆனால் 4,000 மட்டுமே தொற்றுக்கள்: பிஹார் அரசு பொய் கூறுகிறது: தேஜஸ்வி யாதவ் தாக்கு

பிஹார் நிதிஷ் குமார் அரசு கரோனா தொற்று விவகாரத்தில் புள்ளி விவரங்களைத் திரிக்கிறது, பொய் கூறுகிறது என்று தேஜஸ்வி யாதவ் சாடியுள்ளார். 

3 கோடி என் 95 முகக்கவசம்; 1.28 கோடி பிபிஇ உடை: மாநில அரசுகளுக்கு  மத்திய அரசு விநியோகம்

மத்திய அரசு மூன்று கோடி என் 95 முகக்கவசங்களை மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ளது. 1.28 கோடிக்கும் அதிகமான பிபிஇ கருவிகள், 10 கோடிக்கும் அதிகமான ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகளையும் மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது

அறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் – உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்

பாலிவுட் நடிகர் சோனு சூட் கோரக்பூரைச் சேர்ந்த  22 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் சோனு சூட் ஊரடங்கு ஆரம்பமான காலத்தில் இருந்தே, வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவி செய்தல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். அண்மையில் கூட ஒரு குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது அவர் கோரக்பூரைச் சேர்ந்த 22 வயது பெண்மணியான தேவ வந்திதா என்பவரின் முழங்கால் அறுவைச் சிகிச்சைக்கு தேவையான 1.20 லட்சம் பணத்தை வழங்கி உதவி செய்துள்ளார்.
பிரக்யா மிஸ்ரா எனற பெயரில் ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கும் தேவ வந்திதா கடந்த வாரம் சோனு சூட்டிடம் உதவிக் கோரும் நோக்கில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் “ ஐயா எனக்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது. உங்களிடம் உதவிக்காக நான் பல முறை கோரிக்கை வைத்திருக்கிறேன். நான் படுக்கையில் இருந்து மீள பண உதவி செய்யுங்கள் என்று கூறி, முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவமனையில் இருந்து கொடுத்த மருந்துச்சீட்டை அதில் இணைத்திருந்தார். அதில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக, மருத்துவமனையில் இருந்து 1.20 லட்சம் கோரப்பட்டது குறிப்பிடப்பட்டிருந்தது.

Have spoken to the doctor.Have lined up your travel too. Ur surgery will happen next week.Get well soon ❣️God bless.? https://t.co/2aQSpXgsrl
— sonu sood (@SonuSood) August 9, 2020
 
அவரது ட்விட்டைப் பார்த்த சோனு சூட் உத்தரபிரதேசம் இந்திராபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொண்டு, தேவ வந்திதாவின் அறுவைச் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தது மட்டுமன்றி, அவர்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சோனு சூட் “ நான் மருத்துவரிடம் பேசி விட்டேன். உங்கள் அறுவைச் சிகிச்சை அடுத்த வாரம் நடைபெறும். விரைவில் குணமாகுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தேவ வந்திதாவை கவனித்து வரும் மருத்துவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது ” சோனு சூட் தேவ வந்திதாவை சந்தித்தப் பின்னர், அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் தொடர்ச்சியாக தேவ வந்திதாவின் உடல் நிலை குறித்தும் அவரது குடும்ப பின்னணி குறித்தும் என்னிடம் கேட்டறிந்தார். என்றார்
கோயிலில் பாதிரியாரக பணியாற்றும் தே வவந்திதாவின் தந்தைக் கூறும் போது “ அவர் எனது மகளின் அறுவை சிகிச்சை மட்டுமல்லாது நாங்கள் ஊர் திரும்புவதற்கும் தேவையான உதவியையும் செய்துள்ளார்.” என்று கூறினார்.

PM Modi: பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா? பரிந்துரை வழங்க சாதுக்கள் சபை முடிவு

முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் ராமர் கோயிலுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இதற்காக அனைத்து சாதுக்களாலும் மதிக்கப்பட்டவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும்.

கோமா நிலையில் பிரணாப் முகர்ஜி: ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், கோமா நிலையில் இருப்பதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் முதல் சில அமர்வுகளில் மட்டும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நேரடியாகச் சந்தித்து வழக்கு விசாரணை

உச்ச நீதிமன்றத்தின் சில அமர்வுகளில் மட்டும் அடுத்த வாரம் முதல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நேரடியாகச் சந்தித்து வழக்குகளை விசாரிக்கும் முறை தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பிரதமர் மோடியுடன் தொடர்பில் இருந்தவருக்கு கொரோனா!

கடந்த வாரம் பூமி பூஜை நிகழ்வில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் இருந்த நிரித்ய கோபால் தாஸுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டாய்லெட்டில் 3 மணி ஒளிந்திருந்த குடும்பம்; பெங்களூரு கலவரத்தில் இப்படியொரு சோகம்!

பெங்களூருவில் நடந்த கலவரத்தின் போது கலவரக்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக குடும்பம் ஒன்று டாய்லெட்டில் ஒளிந்திருந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சலுகை – பிரதமர் மோடி

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு வரி விதிப்பில் சலுகை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரப்படுத்தும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நேர்மையாக வரி செலுத்துவோருக்கான புதிய திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும். நேர்மையாளர்களுக்கு வரி விதிப்பில் சலுகை வழங்கப்படும். வரிவிதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
உரிய நேரத்தில் நேர்மையாக வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள். வரி செலுத்துவோர் அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்று சேருகின்றன” எனத் தெரிவித்தார்.