50 ரூபாய் சேமிப்பு.. ஒரு கோடி வருமானம்.. இப்படி முதலீடு செஞ்சு பாருங்க!

by -29 views

ஹைலைட்ஸ்:

  • 50 ரூபாய் சேமிப்பில் கோடீஸ்வரராகலாம்
  • ஒரு கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும்

கோடீஸ்வரராக வேண்டுமென்ற ஆசை பலருக்கும் இருக்கலாம். ஆனால், தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும்போது அதுவொரு எட்ட முடியாத உயரமாக தெரியலாம். எனினும், தொடர் முயற்சியாலும், பொறுமையாலும் நிச்சயமாக கோடீஸ்வரராக வேண்டும்.

இதற்கு, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் SIP முறையில் முதலீடு செய்வது ஒரு நல்ல வழி. SIP முதலீடு என்றால் என்ன? ஏதேனும் ஒரு திட்டத்தில் மிகப்பெரிய தொகையை ஒரே தவணையில் முதலீடு செய்ய முடியாதவர்கள், மாதம் தோறும் சிறு சிறு தொகையாக முதலீடு செய்வதே SIP.

நீண்டகால அடிப்படையிலான முதலீடுகளுக்கு இதுவொரு சூப்பர் திட்டம். எவ்வளவு விரைவில் முதலீட்டைத் தொடங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிக வருமானம் கிடைக்கும். உதாரணமாக, 25 வயது முதல் முதலீடு செய்யத் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

Fixed Deposit: அதிக வட்டி வழங்கும் 5 வங்கிகள்!
தினமும் 50 ரூபாய் சேமித்து முதலீடு செய்தாலே நீங்கள் கோடீஸ்வரராகிவிடலாம். ஒரு நாளைக்கு 50 ரூபாய் சேமிப்பு என்றால் ஒரு மாதத்துக்கு 1500 ரூபாய் சேமிப்பு. சராசரியாக 12% முதல் 15% வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 1500 ரூபாய் மாதம் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்.

35 ஆண்டுகளுக்கு இதெபோல முதலீடு செய்தால் மொத்த முதலீட்டுத் தொகை 6.3 லட்சம் ரூபாய். சராசரியாக 12.5% வருமானம் கிடைத்தால் கூட உங்களுக்கு சுமார் 1.1 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

நீங்கள் 30 வயதில் SIP முதலீட்டைத் தொடங்குவதாக வைத்துக்கொள்வோம், இப்போது 5 ஆண்டுகள் தாமதமாக முதலீடு தொடங்குகிறது. ஆக உங்களின் மொத்த முதலீட்டுத் தொகை 5.4 லட்சம் ரூபாய் மட்டுமே. 30 ஆண்டுகளில் இந்த முதலீடு 59.2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் தரும்.

5 ஆண்டு தாமதத்திலேயே 40 லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, எவ்வளவு விரைவாக முதலீட்டை தொடங்குகிறோமோ அவ்வளவு அதிகமாக வருமானம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *