50 பைசா காயின் இருக்கா? ஒரு லட்சம் கிடைக்கும்!

by -163 views

ஹைலைட்ஸ்:

  • பழைய 50 பைசா காயினுக்கு நல்ல டிமாண்ட்
  • 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

பழைய நாணயங்கள், அரிய நாணயங்களை சேகரிப்பவர்கள் நிறைய பணம் சம்பாதிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆன்லைன் மார்க்கெட்டில் அண்மைக்காலமாக பழைய மற்றும் அரிய நாணயங்களுக்கு டிமாண்ட் கடுமையாக எகிறியுள்ளது. ஏற்கெனவே பல்வேறு அரிய நாணயங்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலை போகியுள்ளன.

பழைய அரிய 50 பைசா நாணயங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் அளவுக்கு டிமாண்ட் உள்ளது. உங்களிடம் பழைய 50 பைசா நாணயம் இருந்தால் அதை படம் பிடித்து OLX தளத்தில் விளம்பரம் செய்யவும். விருப்பமுள்ளவர்கள் உங்களை தொடர்புகொண்டு வாங்குவார்கள்.

இதேபோல Indiamart.com தளத்திலும் நீங்கள் உங்களது பழைய நாணயங்கள், அரிய நாணயங்களை விளம்பரம் செய்து விற்றுவிடலாம். இந்த இணையதளத்தில் ஏலம் நடத்தப்பட்டு, அதிக விலை கேட்பவரிடம் விற்பனை செய்யப்படும்.

1448 கோடி ரூபாய் வருமானம்.. அதிர்ஷ்டம்னா இதுதான் போல!
இதுபோக Coin Bazaar இணையதளத்தில் பழைய நாணயங்கள், அரிய நாணயங்கள், அரிய ரூபாய் நோட்டுகள் போன்றவை வாங்கப்படுகின்றன. சில அரிய நாணயங்கள் அல்லது நோட்டுகளுக்கு லட்சங்களில் பணம் கிடைக்கிறது.

வைஷ்ணோ தேவி மாதாவின் படம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களுக்கும் நல்ல டிமாண்ட் உருவாகியுள்ளது. இந்த நாணயங்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலை போகும் அளவுக்கு டிமாண்ட் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் 2002ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்டவை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *