3000 ரூபாய் பென்சன்…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

by -21 views

அனைவருக்குமே ஓய்வுக் காலத்தில் நிதி நெருக்கடி இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். கடைசிக் காலத்தில் தங்களது பிள்ளைகள் தங்களைப் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்காமல் தங்களது நிதித் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்வது நல்லது. அதற்காகவே நிறைய பென்சன் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் அமைப்பு சாரா துறையைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு சிறந்த பென்சன் திட்டம் உள்ளது. அதுதான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம்.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும். பயனாளியின் 60 வயதுக்குப் பிறகு இந்த உதவியைப் பெறலாம். இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன. மாத வருமானம் 15,000 ரூபாய்க்குக் கீழ் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. பிஎஃப் அமைப்பு, தேசிய பென்சன் திட்டம், ஈஎஸ்ஐசி போன்ற திட்டங்களில் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது. இதில் இணைவதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தை அணுகினாலே போதும்.

பிட்காயின் வச்சிருக்கீங்களா.! உங்களுக்கு கொண்டாட்டம் தான் போங்க!

18 வயது நிரம்பிய ஒருவர் இத்திட்டத்தில் இணைந்து தனது 60 வயதுக்குப் பிறகு மாதம் 3,000 ரூபாய் பென்சன் வாங்கவேண்டுமானால் அவர் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். அதேபோல, 29 வயதில் இணைந்தால் 100 ரூபாயும், 40 வயதில் இணைந்தால் 200 ரூபாயும் பிரீமியம் செலுத்த வேண்டும். 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இத்திட்டத்தில் இதுவரையில் 45 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தில் இணைவதற்கு ஆதார் கார்டு மற்றும் ஜன் தன் வங்கிக் கணக்கு ஆகிய இரண்டும் தேவைப்படும். மொபைல் நம்பரும் தேவை. இத்திட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு 18002676888 என்ற டோல் ஃபிரீ எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *