3 மாதத்தில் இருமடங்கு லாபம்.. வாரி வழங்கிய பங்கு இதுதான்!

by -46 views
3 மாதத்தில் இருமடங்கு லாபம்.. வாரி வழங்கிய பங்கு இதுதான்!
3 மாதத்தில் இருமடங்கு லாபம்.. வாரி வழங்கிய பங்கு இதுதான்!

டாடா டெலி பிசினஸ் சர்வீசஸ் (Tata Tele Business Services) நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 538% உயர்ந்துள்ளது. கடந்த மே 20ஆம் தேதி இந்த பங்கின் விலை 12.55 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது இந்த பங்கு விலை 80.05 ரூபாயாக உள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் இந்த பங்கில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை ஆறு மடங்கு அதிகரித்துள்ளனர். கடந்த மே மாதம் இந்த பங்கில் 50,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 3.18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். மே மாதம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 6.37 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.

கடந்த ஜூலை மாதம் மட்டும் இந்த பங்கின் விலை 34.45 ரூபாயாக சரிந்தது. பின்னர் அக்டோபர் வரை 35 முதல் 37 ரூபாய் வரை ஏறி இறங்கி வந்தது. அதைத்தொடர்ந்து திடீரென பங்கு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த பங்கில் கடந்த ஜூலை மாதம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 2.32 லட்சம் ரூபாயாக மாறியிருக்கும்.

சேவிங்ஸ் அக்கவுண்டுக்கே அதிக வட்டி.. இதுதான் அந்த வங்கி!
ஜூலையில் 50,000 ரூபாய் முதலீடு செய்தால் தற்போது 1.16 லட்சம் ரூபாயாக மாறியிருக்கும். அதாவது கடந்த மூன்று மாதங்களில் உங்கள் பணம் இருமடங்காக மாறியிருக்கும். ஆக, நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய இதுவொரு நல்ல பங்கு என்கின்றனர் நிபுணர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *