28,000 ரூபாய் பென்சன் கிடைக்கும்! இது சூப்பர் பாலிசி!!

by -56 views

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) நீண்ட கால முதலீட்டிற்கான ஒரு சிறந்த காப்பீட்டு நிறுவனமாகும். நீங்கள் ஓய்வு பெறும் திட்டம் இருந்தாலோ அல்லது கடைசிக் காலத்தில் நிதி நெருக்கடி இல்லாத சுகமான வாழ்க்கை வாழ விரும்பினாலோ எல்ஐசி பாலிசி உங்களுக்கு உதவியாக இருக்கும்.

எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் ஜீவன் ஆனந்த் பாலிசி மிக முக்கியமான ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தினமும் 80 ரூபாய் முதலீடு செய்தாலே உங்களுக்கு 28,000 ரூபாய் வரையில் பென்சன் கிடைக்கும்.

குறைந்தது 28 வயது நிரம்பியவர் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். 25 வருட காலத்திற்குப் பிறகு உங்களுக்கு வருமானம் வழங்குகிறது. இந்த பாலிசியின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரையில் லாபம் பெறலாம்.

இந்த ஒரு பாலிசி போதும்!! கடைசிக் காலத்தில் உட்கார்ந்தே சாப்பிடலாம்!!

ஒரு நபர் தனது 35 வயதில் 20 வருட காலத்திற்கு முதலீடு செய்யத் தொடங்கினால் அவர் முதல் ஆண்டில் ரூ.30,273 பிரீமியம் செலுத்த வேண்டும். மாதாந்திர அடிப்படையில் பார்த்தால் ரூ.2,522 செலுத்த வேண்டும்.

35 வயதில் தொடங்கி 20 ஆண்டுகளுக்கு பாலிசி எடுத்தால் நீங்கள் செலுத்தும் தொகை ரூ.5 லட்சம். உங்களுக்கு 20 தவணைகளில் ரூ.22,500 கிடைக்கும். அதோடு, ரூ.10,000 கூடுதல் பலனும் கிடைக்கும். மொத்தமாக உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.4.60 லட்சம். நீங்கள் டெபாசிட் செய்த தொகை ரூ.5 லட்சத்துடன் சேர்த்து உங்களுக்கு ரூ.9.60 லட்சம் வந்து சேரும்.

நீங்கள் தினமும் 79 ரூபாய் முதலீடு செய்தாலே உங்களது 60 வயதுக்குப் பிறகு ரூ.27,664 பென்சன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *