அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்..!


இந்தியாவின் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த திட்டங்களில் அஞ்சலக திட்டங்கள் (Post Office Schemes), இந்திய அரசு திட்டங்கள் என அனைத்தும் அடக்கம். இந்த நேரத்தில் அப்படியே அந்த திட்டங்களைப் பற்றியும் கொஞ்சம் பார்த்து விடுங்களேன்.

யார் அறிவிப்பார்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரத் துறை தான் சிறு சேமிப்பு திட்டங்களுக்காக வட்டி விகிதங்களை அறிவிக்கும். ஜனவரி - மார்ச் 2019 காலாண்டுக்கான வட்டி விகிதத்தை கடந்த டிசம்பர் 31, 2018 அன்று வெளியிட்டது பொருளாதார விவகாரத் துறை. அந்த அறிப்பைப் காண: 
Savings deposit 1 

சாதாரணமாக மக்கள் வங்கிக் கணக்குகளில் வைத்திருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டி அல்ல. இது இந்திய அஞ்சலகங்களில் இருக்கும் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம். இந்த வட்டி பெரும்பாலும் மாறாது. கடந்த அக்டோபர் - டிசம்பர் 2018 காலாண்டில் இருந்த 4% வட்டி தான் இப்போது ஜனவரி - மார்ச் 2019 காலாண்டுக்கும் என அறிவித்திருக்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முஐ தான் வட்டி கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் வட்டி ஒரு மொத்த நிதி ஆண்டுக்கு தான் கணக்கிடப்படும். 


Savings deposit 2 

1. இந்த ரக சேமிப்பு கணக்கை யார் வேண்டுமானாலும் தனியாகவோ அல்லது இணைந்தோ திறக்கலாம். 
2. கணக்கை தொடங்க வெறும் 20 ரூபாய் தான் கட்டணம். கணக்கை திறக்கும் போது ரொக்கத்தில் தான் திறக்க வேண்டும். 
3. ரொக்கத்தில் மட்டுமே கணக்கை இயக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ. 50 பராமரிக்க வேண்டும். 
4. காசோலை (Cheque) வசதி வேண்டும் என்றால் குறைந்தபட்ச கட்டணமாக ரூ 500 பராமரிக்க வேண்டும். 
5. காசோலை ரத்தானால் ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படும்.   


Savings deposit 3 

1. இந்த சேமிப்பு கணக்குகளில் இருந்து வரும் வட்டிக்கு (ஒரு நிதி ஆண்டில் ரூ. 10,000 வரை மட்டும்) வரிக் கழிவு பெறலாம். அதாவது கிடைக்கும் வட்டிக்கு வரி கட்டத் தேவை இல்லை. 
2. ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். தொடங்கும் கணக்குகளுக்கு நாமினிக்களையும் நியமிக்கலாம். 
3. அஞ்சலக சேமிப்பு கணக்கு இந்தியாவின் எந்த அஞ்சலக அலுவலகத்துக்கும் மாற்றிக் கொள்ளலாம். 
4. மூன்ரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பணத்தை கணக்கில் செலுத்தவோ அல்லது பணத்தை சேமிப்பு கணக்கில் இருந்து எடுக்கவோ வேண்டும்.
5. எந்த அஞ்சலக அலுவலகம் மூலம் வேண்டுமானாலும் பணத்தை செலுத்தவோ அல்லது பணத்தை வெளியே எடுக்கவோ முடியும். முக்கியமாக ஏடிஎம் வசதி உண்டு. 


1 Yr Time Deposit 

அதே அஞ்சலகங்களில் ஒரு வருட காலத்துக்கு முதலீடு செய்யும் தொகைக்கு ஒரு வட்டி தொகையை கணக்கில் வரவு வைப்பார்கள். கடந்த அக்டோபர் - டிசம்பர் 2018 காலாண்டில் இருந்த 6.9% வட்டியை அதிகரித்து, இப்போது ஜனவரி - மார்ச் 2019 காலாண்டுக்கு 7.0% ஆக அறிவித்திருக்கிறார்கள். இந்த திட்டத்தில் வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிடப்படும். 


2 Yr Time Deposit 

அதே அஞ்சலகங்களில் இரண்டு வருட காலத்துக்கு முதலீடு செய்யும் தொகைக்கு ஒரு வட்டி தொகையை கணக்கில் வரவு வைக்க வேண்டும் இல்லையா..? அதற்கு கடந்த அக்டோபர் - டிசம்பர் 2018 காலாண்டில் இருந்த 7.0% வட்டியைஅப்படியே ஜனவரி - மார்ச் 2019 காலாண்டுக்கு உயர்த்தாமல் வைத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தில் வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிடப்படும். 


3 Yr Time Deposit 

அஞ்சலகங்களில் மூன்று வருட டெபாசிட்டுகளுக்கு கடந்த அக்டோபர் - டிசம்பர் 2018-க்கு 7.2 சதவிகிதம் வட்டி கொடுத்தார்கள். ஆனால் இப்போது ஜனவரி - மார்ச் 2019-க்கு 0.2 சதவிகிதம் குறைத்து 7.0 சதவிகிதமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த திட்டத்தில் வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிடப்படும். 


5 Yr Time Deposit 

அஞ்சலக திட்டங்களில் பெரும்பாலான சம்பளதாரர்களளுக்கு கவர்ச்சிகரமான திட்டமாக இருக்கும் இந்த ஐந்து வருட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் கடந்த அக்டோபர் - டிசம்பர் 2018-ல் 7.8% ஆக இருந்தது. இந்த ஜனவரி மார்ச் 2019 காலாண்டுக்கும் அதே 7.8% வட்டியை மாற்றாமல் வைத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தில் வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிடப்படும். 


1,2,3,5 வருட அஞ்சலக டெபாசிட்டுகள் 

1. இந்த ரக கணக்கை யார் வேண்டுமானாலும் தனியாகவோ (Individual Account) அல்லது இணைந்தோ (Joint Account) தொடங்கலாம். தனி கணக்கை இணைப்புக் கணக்காகவோ, இணைப்புக் கணக்கை தனி கணக்காகவோ மாற்றிக் கொள்ளலாம். 
2. கணக்கை ரொக்கம் செலுத்தியோ அல்லது காசோலை செலுத்தியோ தொடங்கலாம். 
3. டெபாசிட் தொகைக்கு நாமினியை நியமிக்கலாம். 
4. இந்த Term Deposit-களை இந்தியாவின் எந்த அஞ்சலக அலுவலகத்துக்கும் மாற்றிக் கொள்ளலாம். 
5. ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். 
6. எந்த அஞ்சலக அலுவலகம் மூலம் வேண்டுமானாலும் பணத்தை செலுத்தவோ அல்லது பணத்தை வெளியே எடுக்கவோ முடியும். முக்கியமாக ஏடிஎம் வசதி உண்டு. 
7. ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படும். 


Auto Renewal 

இந்த ரக டேர்ம் டெபாசிட்டுகள் முதிர்ச்சிக் காலத்துக்கு பின் தானாகவே அதே காலத்துக்கு மற்றொரு டெபாசிட்டாக மறு முதலீடு செய்து கொள்ளும். எடுத்துக் காட்டு: ராஜா என்பவர் ஜனவரி 2016-ல், அம்பத்தூர் அஞ்சலகத்தில் 3 வருட டேர்ம் டெபாசிட் போட்டிருக்கிறார். இப்போது ஜனவரி 2019-ல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தானாகவே ஒரு டேர்ம் டெபாசிட்டாக ராஜாவின் பணம் மறு முதலீடு செய்யப்படும். 


ஐந்து வருட டேர்ம் டெபாசிட்டுக்கு மட்டும் 

ஒருவர் ஐந்து வருட டேர்ம் டெபாசிட்டில் முதலீடு செய்யும் தொகைக்கு மட்டும் வருமான வரிச் சட்டம் 80சி-ன் கீழ் வரிக் கழிவு பெறலாம். எடுத்துக் காட்டு. ராணி ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருக்கு மாத சம்பளம் 40,000 என்றால் ஆண்டுக்கு 4,80,000. இப்போது 4.8 லட்சத்தில் அடிப்படைக் கழிவான 2.5 லட்சம் போக, வீட்டு வாடகைக்கு ஒரு லட்சம் ரூபாய் போக, பிஎஃப் பிடித்தம் ஆண்டுக்கு 25,000 போக (4,50,000 - 2,50,000 - 1,00,000- 25,000 = 1,05,000) 1.05 லட்சத்துக்கு வரி செலுத்த வேண்டும். 

இங்கே முதலீடு செய்தால் தற்செயலாக ராணியின் நண்பர் அஞ்சலக டேர்ம் டெபாசிட்டுகளைப் பற்றிச் சொல்ல ராணியும் ஒரு லட்சம் ரூபாயை ஐந்து வருட டேர்ம் டெபாசிட்டில் முதலீடு செய்துவிட்டாள். எனவே இனி 1.05 லட்சத்தில் 1 லட்சம் ரூபாய் போக வெறும் 5,000 ரூபாய்க்கு வரி செலுத்தினால் போதுமானது. 


5 Yr Recurring Deposit 

RD - Recurring Deposit என அடித்தட்டு மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த் ஆஞ்சலக திட்டத்துக்கான வட்டி விகிதம் கடந்த காலாண்டில் இருந்த 7.3 சதவிகிதத்தை இந்த காலாண்டுக்கும் நீட்டித்து இருக்கிறார்கள். ஆக எந்த மாற்றமும் இல்லை. இந்த திட்டத்தில் வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிடப்படும். 


ஆர்டி 1 

1. ஆர்டியில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையாக மாதம் 10 ரூபாய் செலுத்த வேண்டும். உச்ச வரம்பு கிடையாது. 
2. ஆர்டி கணக்கை ரொக்கம் மூலமாகவோ காசோலை மூலமாகவோ தொடங்கலாம். நாமினேஷன் வசதி உண்டு. 
3. ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்தியாவின் எந்த அஞ்சலகத்துக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். 
4. இந்த ரக கணக்கை யார் வேண்டுமானாலும் தனியாகவோ (Individual Account) அல்லது இணைந்தோ (Joint Account) தொடங்கலாம். தனி கணக்கை இணைப்புக் கணக்காகவோ, இணைப்புக் கணக்கை தனி கணக்காகவோ மாற்றிக் கொள்ளலாம். 
5. ஒவ்வொரு மாதத்தின் 15-ம் தேதி ஆடிக்கான தவணை செலுத்த கட்சி தேதியாக கருதப்படும். 15-ம் தேதிக்கு மேல் தாமதமாக செலுத்த வேண்டும் என்றால் 100 ரூபாய்க்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திய பின் தான் தவணையை செலுத்த முடியும். 


ஆர்டி 2 

1. ஒரு கணக்கில் இப்படி நான்கு தவணைகளுக்கு மேல் செலுத்தாமல் இருந்தால் அதை செயல்படாத கணக்கான கருதப்படும். அதன் பின்னும் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு தவணைகளை செலுத்தவில்லை என்றால் மேற்கொண்டு கணக்கில் தவணைகளை செலுத்த முடியாது. 
2. ஆறு தவணைகளை முன் கூட்டியே செலுத்தினால், செலுத்த வேண்டிய தவனையில் கொஞ்சம் தள்ளுபடி வேறு கிடைக்கும். 


ஆர்டி எடுத்தல் 

ஆர்டி கணக்கைத் தொடங்கி ஒரு ஆண்டுக்கு பின் 50% தொகையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கணக்கு முதிர்ச்சி அடைவதற்குள் ஒற்றை தவணையாக வட்டி உடன் திருப்பிச் செலுத்த வேண்டும். 


5 Yr Senior Citizen Savings scheme 

நடுத்தர மக்களுக்கு ஆர்டி என்றால் மூத்த குடிமக்களுக்கு இந்த ஐந்து வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். இந்திய அஞ்சலகங்கள் நடத்தும் சிறந்த திட்டங்களில் இதுவும் ஒன்று. பெரும்பாலான நடுத்தர பதவிகளில் இருக்கும் அரசு ஊழியர்களின் திட்டம் இது. இந்த திட்டத்துக்கான வட்டி விகிதம் கடந்த காலாண்டைப் போலவே இந்த காலாண்டுக்கும் 8.7% ஆகவே வைத்திருக்கிறார்கள். இந்திய சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வட்டி விகிதம் பெறும் திட்டம் இது தான். இந்த திட்டத்தில் வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிடப்படும். 


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - 1 

1. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்த திட்டத்தில் இணையலாம். 
2. 55 வயதுக்கு மேல் வி ஆர் எஸ் முறையில் ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு கால சலுகைகளைப் பெற்று ஒரு மாதத்துக்குள் இந்த திட்டத்தில் இணையலாம். 
3. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கௌ தனியாகவோ, இணைந்தோ (மனைவி அல்லது கணவனோடு மட்டும்) இயக்கலாம். ஆனால் உச்ச வரம்பான 15 லட்சத்தை கணக்கில் கொண்டு தான் அடுத்தடுத்த கணக்குகள் தொடங்கப்படும். 
4. இந்த திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகவோ அல்லது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் காசோலை மூலம் செலுத்தியோ கணக்கைத் தொடங்கலாம். 
5. நாமினேஷன் வசதி உண்டு 


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - 2 

1. இந்தியாவின் எந்த அஞ்சலகத்துக்கு வேண்டுமானாலும் கணக்கை மாற்ரிக் கொள்ளலாம். 
2. இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி, அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்கப்படும். 
3.ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை வட்டி கணக்கிடப்படும். 
4. பணத்தை முதிர்ச்சி காலத்துக்கு முன் கூட்டியே எடுக்கலாம். டெபாசிட் கணக்கு தொடங்கி ஒரு வருடத்துக்குள் என்றால், டெபாசிட் தொகையில் 1.5% கழித்துக் கொண்டு தருவார்கள். இதுவே இரண்டு வருடத்துக்குள் என்றால் 1% டெபாசிட் தொகை கழித்துக் கொண்டு தருவார்கள். 


வரிக் கழிவு 

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையை 80சி வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி செலுத்த வேண்டாம். இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை ஒரு நிதி ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் போனால் டிடிஎஸ் பிடித்தம் செய்வார்கள். 


5 Yr Monthly Income Account 

பென்ஷன் மற்ரும் வட்டி வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து மாதங்களை ஓட்டும் நடுத்தர பென்ஷனர்களின் பொன்னான திட்டம் இது. இந்த திட்டத்துக்கான வட்டி விகிதமும் கடந்த காலாண்டை போலவே இந்த காலாண்டுக்கும் 7.7%-ல் மாற்றம் இல்லை. இந்த திட்டத்தில் வட்டி மாதாமாதம் கணக்கிடப்படும். 


மாத வருமான திட்டம் 

1. குறைந்த பட்ச தொகை 1500, அதிகபட்ச தொகை 4,50,000, ஜாயின் அக்கவுண்ட் என்றால் அதிகபட்சம் 9,00,000. 
2. ஜாயின் அக்கவுண்டில் வரும் வட்டி இருவருக்கு சரி சமமாக பிரித்துக் கணக்கிடப்படும். 
3. யார் வேண்டுமானாலும் இந்த கணக்கைத் தொடங்கலாம். 
4. கணக்கை ரொக்கம் வழியாகவோ, காசோலை வழியாகவோ தொடங்கலாம்., நாமினேஷன் வசதி உண்டு. 
5. இந்தியாவின் எந்த அஞ்சலகத்துக்கும் கணக்கை மாற்றல் செய்து கொள்ளலாம். 
6. தனி கணக்கை, ஜாயிண்ட் கணக்காகவும், ஜாயிண்ட் கணக்கை தனி கணக்காகவும் மாற்றிக் கொள்ளலாம். 


மாத வருமான திட்டம் 1 

1. முதிர்ச்சிக் காலம் ஐந்து ஆண்டுகள். அதற்கு இடையிலேயே மாதாமாதம் வட்டி கணக்கிட்டு சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்கப்படும். 
2. பணத்தை முதிர்ச்சி காலத்துக்கு முன் கூட்டியே எடுக்கலாம். டெபாசிட் கணக்கு தொடங்கி 3 வருடத்துக்குள் என்றால், டெபாசிட் தொகையில் 2% கழித்துக் கொண்டு தருவார்கள். இதுவே3 வருடத்துக்கு மேல் என்றால் 1% டெபாசிட் தொகை கழித்துக் கொண்டு தருவார்கள். 


5 Yr National Savings certificate 

கிஷான் விகாஸ் பத்ரா என்கிற இந்த திட்டத்துக்கான வட்டி ஆண்டுக்கு 8.0 சதவிகிதமாகவே தொடர்கிறது. புதிய அறிவிப்பில் எந்த மற்றமும் இல்லை. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வட்டி முதிர்ச்சிக் காலத்தில் தான் வழங்கப்படும். ஆனால் வட்டி ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்பட்டு, அந்த வட்டியும் மறு முதலீடு செய்யப்படும். 


5 Yr National Savings certificate 1 

1. குறைந்தபட்ச முதலீட்டு தொகை 100 ருபாய். இந்த பத்திரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டம் 80 சி-ன் கீழ் வரி செலுத்தத் தேவை இல்லை. 
2. ஒருவர் பெயரில் வாங்கும் பத்திரத்தை, முதிர்ச்சிக் காலத்துக்கு முன் ஒரு முறை மட்டும் வேறு ஒருவர் பெயருக்கு மாற்றலாம். 


Public Provident Fund scheme 

எந்த நிறுவனத்திலும் வேலை பார்க்காத மக்கள் தங்கள் பணத்தை பிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்ய அரசு ஏற்படுத்திக் கொடுத்த வழி தான் நித பப்ளிப் ப்ராவிடெண்ட் ஃபண்டு. இந்த திட்டத்துக்காக வட்டி கடந்த காலாண்டைப் போல இந்த காலாண்டும் 8%-ஆகவே தொடர்கிறது. 


Kisan Vikas Patra 

இந்த விவசாயப் பத்திரத்துக்கான வட்டி 7.7 சதவிகிதமாகவே வைத்திருக்கிறார்கள். இந்த பத்திரத்தில் முதலீடு செய்யும் தொகைக்கான வட்டி 112 மாத கால முதிர்ச்சிக்கு பின் தான் வழங்கப்படும். 


Sukanya Samriddhi Account Scheme 

இந்த திட்டத்தைப் பற்றி முழுமையாக படிக்க : இந்த திட்டத்துக்கான வட்டி விகிதம் அதே 8.5 சதவிகிதத்திலேயே வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் சிறு சேமிப்பு திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்குப் பிறகு அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இது தான்.


Post a Comment

Previous Post Next Post