தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகமானது தமிழ்நாடு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு, சிறந்த குறிக்கோள்களான சிறு அளவு தொழில்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தையும் மற்றும் மாநிலத்தில் பின் தங்கிய மற்றும் முன்னேற்றமில்லாத இடங்களில் தொழில்களை பரப்புதல் துரிதப்படுத்துவதைப் பற்றிய சிறப்பான குறிக்கோள்களை அட்டவணைப்படுத்தியுள்ளது.

நோக்கம்

சிறப்பான வளர்ச்சி மிக்க மையங்களை தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உருவாக்குதல். 1971ல் தொழில் தொடங்க ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் விரிவாக்கப்பட்டது. இன்றும் கூட இந்தக் கழகம் தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாடு அரசாங்கம், முற்போக்கு சிந்தனையுடனும், தாராள / தயாள திறனும் கொண்டது. இந்த சிறு தொழில் முன்னேற்றக் கழகமானது அரசாங்கத்தின் வருமானம் செலவு, கடன் தொடர்புடைய மற்றும் மற்ற பல சலுகைகள் உள்ளடக்கிய சிறு அளவு தொழிலை முக்கியமாக சுய வேலைவாப்புக்களை ஊக்குவித்தலை நடைமுறைப்படுத்துகிறது. முக்கியக் குறிக்கோள் யாதெனில் சிறு அளவு தொழில் மேம்பாட்டினை ஊக்குவித்தல், மேம்படுத்தும் நடவடிக்கைகள் பின்வருமாறு.

அடிப்படை வசதிகள் மற்றும் இட வசதிகளை உருவாக்குதல்

அடிப்படை வசதிகளை உருவாக்குதல், இது ஒரு முக்கிய நடவடிக்கைகளாகும். அந்த வசதிகளான சாலைப் போக்குவரத்து, சாக்கடை நீர், மழை நீலை வடிகட்டுதல், மின்சார விளக்குகள், நீர் வசதி மற்றும் பல போன்றவற்றை தொழிற்பேட்டையானது அடிப்படையாகக் கொண்டு வசதிகளைச் செய்து தருகிறது. தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகமானது தொழிற்சாலை அமைத்து மேம்படுத்துவதற்கான பல்வேறு இடங்களில் ஆராய்ந்து, இடத்தினை தேர்வு செய்து, தொழிற்சாலைக்கு கொட்டகையை வெவ்வேறு அளவில், இடத்தில் அமைத்து, அதற்குத் தேவையான அடிப்படை / தேவையான வசதிகளை மேம்படுத்தி மற்றும் அதற்குச் சுலபமான அடிப்படை தவணைகளையும் ஒதுக்கிட்டுள்ளது. இவ்வாறு இட வசதிகளை கட்டுவதற்கு முன், கழகமானது தொழில் தொடங்குபவர்களின் தொழிற்சாலையின் இடம் மற்றும் கொட்டகைகளின் தேவைகளைப் பற்றிய கருத்தாய்வினை நடத்தி மதிப்பிடவேண்டும். இந்தக் கழகமானது 76 தொழிற்பேட்டையைப் பராமரித்து வருகிறது. இதில் 36 ஆனது அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு சிட்கோ கழகத்தால் பேணிக்காக்கப்பட்டது. இந்தக் கழகம் மட்டும் 44 தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தொழிற்பேட்டைகள் வெவ்வேறு கிராம மற்றும் பின் தங்கிய இடங்களில் அமைந்துள்ளது. நான்கு - ஐந்து ஆண்டுத்திட்டத்தின் அடிப்படையில் திட்ட முறைகளை இந்தக் கழகமானது நடைமுறைப்படுத்தியது.

முக்கிய / அரிதான மூலப்பொருட்களின் பகிர்மானம்

கழகமானது, சிறு அளவு தொழில் பிரிவானது மூலப்பொருட்களைப் போட்டியிட்டு சந்தையில் இருந்து வாங்க பெரும் முயற்சியை மேற்கொள்கிறது. இது தான் கழகத்தின் அடிப்படை நோக்கமாகும். தேவைகளின் அடிப்படையில் மூலப்பொருள்களை சிட்கோவானது கையாளுகிறது.

சந்தை உதவியளிப்புத்திட்டம்

கழகமானது, சிறு அளவு பிரிவுகளுக்கு பொருட்களின் வியாபாரத்துக்காக உதவுவதன் மூலம் இந்த சிறு பிரிவுகளானது உண்மையான வெற்றியை அடைகிறது. சந்தை உதவியளிப்பு திட்டத்தினை கழகமானது அடிப்படையாகக் கொண்டு எஸ்எஸ்ஐ பிரிவுக்கு பொருட்களின் முதலீட்டுக்கு எந்தவித தடைகளும் ஏற்படவில்லை. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தேசிய அரசாங்கத் துறை நடத்தும் ஏலக் குத்தகைகளில் இந்தக் கழகமானது பங்கேற்கிறது. 1998-99 ல் சிட்கோவின் விற்பனை மதிப்பானது ரூபாய் 500 லட்சமாகும். இதனால் எஸ்எஸ்ஐ பிரிவானது பொருட்களின் விற்பனையை உயர்த்தி, கழகத்தின் மூலம் சரியான இடைவெளியில் வாங்குபவர்கள் - விற்பவர்களின் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

ஏற்றுமதி சந்தையின் உதவியளிப்பு

மாற்றங்கள் நிகழும் இந்தத் தருணத்தில், மாநில சிறு தொழிலின் மரபுவழி அல்லாமல் புதுமையான முறையில் கழகமான மேம்படுத்துகிறது. 2.11.1998ல் சிறு மற்றும் மத்தியத் தொழில் பிரிவின் ஏற்றுமதி சந்தைப் பற்றிய புதிய திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டது. TANSTIA-FNF சேவை மையத்துடன் இந்தக்கழகமான இணைந்து ஒரு புதிய இணையதளத்தினை உருவாக்கி, விற்பனை பொருட்களை காட்சித் திரையில் வைத்து, அதன் பின் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் துணையானது சிறு பிரிவுத் தொழில் புரிவோர்களுக்கு தேவைப்படுகிறது. எனவே தான் சிட்கோவானது பொது ஏற்றுமதி மேலாளராக இருந்து விதவிதமான சேவைகளை எஸ்எஸ்ஐ பிரிவுகளின் வியாபாரப் பொருட்களுக்கு உதவி புரிகிறது.
ஒவ்வொரு வருடமும் எஸ்எஸ்ஐ பிரிவுகளின் ஏற்றுமதி சம்பந்தப்பட்ட விசாரணையானது இந்தியப் பன்னாட்டு வணிக அமைப்பில் கலந்துரையாடப்படும். இந்தக் கலந்துரையில் சிட்கோவும் பங்கேற்றது. இந்த அமைப்பானது, எஸ்எஸ்ஐ பிரிவின் ஏற்றுமதியின் அளவை அதிகப்படுத்துகிறது. அதாவது எஸ்எஸ்ஐ பிரிவின் உள் விற்பனையைவிட ஏற்றுமதியின் அளவின் வளர்ச்சி அதிகமாக இருத்தல் வேண்டும்.
ஆதாரம் : தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO

Post a Comment

Previous Post Next Post