இலவச சுயதொழில் பயிற்சி திட்டம்

அன்பான தோழர்களே!
இதோ நான் கொஞ்சம் கொஞ்சமாக எனது எண்ணங்களை உருவேற்றிக்கொண்டேயிருக்கிறேன். அதன் அடுத்தகட்டம்தான் இந்த "இலவச சுயதொழில் பயிற்சி திட்டம்".
இத்திட்டத்தின் மூலம் நம்மால் இயன்ற அளவிற்கு ஏழை  மற்றும் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு பகுதி நேரமாக சுயதொழில் செய்து சுயமாக வருமானம் ஈட்டி அதன் மூலம் சுயமாக தனது கல்விப்படிப்பை தொடருவதற்க்கான பயிற்சியையும், வேலைவாய்ப்பையும் அளிப்போம்.

மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளே மாணவர்கள் மற்றும் மாற்றுதிரனாளிகளுக்கு அவர்களின் வாழ்க்கை சூழ்நிலை மற்றும் திறமைகளுக்கேற்ப சுயதொழில் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படும்.
பொருளாதார சூழ்நிலையின் காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை  மற்றும் கல்வியில் திறமை குறைவின் காரணமாக வேலை கிடைக்காமலிருப்பது போன்றவற்றிற்கு இத்திட்டம் ஒரு முற்றுப்புள்ளியாய் அமையும்.
இப்பயிற்சியின் மூலம் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ சுயதொழில் செய்யலாம். மாணவர்கள் பகுதிநேரமாக சுயதொழில் செய்துகொண்டே தனது படிப்பையும் தொடரலாம்.


கல்வி கற்கும் காலத்திலயே மாணவர்களுக்கு பாடக்கல்வியுடன் இவ்வகை எளிய தொழிற்க்கல்வியையும் அளிப்பதால் மாணவர்களின் திறமை மேம்படுவதுடன், படிப்பை முடித்தபிறகு வேலை கிடைக்கும்வரையும், வேலை கிடைத்தபிறகு பகுதி நேரமாகவும் இச்சுயதொழில்களை செய்ய இயலும்.

அளிக்கப்படும் பயிற்சிகளை பற்றி அறிந்துகொள்ள:

கணினிவழியில்
COMPUTER BASED JOBS

  • கம்ப்யூட்டர் சர்வீஸ் மற்றும் பராமரிப்பு
  • வெப் சைட் டிசைனிங் மற்றும் பராமரிப்பு
  • ஒலி மற்றும் ஒளி பாடல்களை தொகுத்தல் மற்றும் பதித்தல்
  •                                       (Audio & Video Song Editing & Recording)
  • அலைபேசி மற்றும் மெமரி கார்டு-ற்கு தகவல்களை பதிவிறக்கம் செய்தல்
  •                                    (Data Download to Cell Phone & Memory Card)
  • ஜாப் வொர்க்ஸ் (Job Works) (Application, Astrology, Marriage Matching, Projects & Training)
  • மின் கட்டணம் மற்றும் டெலி போன் கட்டணம் செலுத்துதல்
  • தகவல் உள்ளீடு (Data Entry in ONLINE & OFFLINE)

எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் 
ELECTRICAL & ELECTRONICS BASED JOBS


எலக்ட்ரிகல் 
(ELECTRICAL)                                                                                                              
லூமினார் அசம்ப்ளிங் & பிட்டிங் (Luminor Fitting)
ஹவுஸ் வோயரிங் (Electrical Wiring)
#  எலக்ட்ரிகல் பொருட்கள் பழுது நீக்குதல்
எலக்ட்ரானிக்ஸ் (ELECTRONICS)       
#  எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுது நீக்குதல் (Electronics equipments repairing)
#  புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உருவாக்குதல் (Assembling New electronics equips. from Old or unused elements)

கைவினைப்பொருட்கள் செய்தல்
HANDICRAFT WORKS

#  புக் மற்றும் பத்திரங்கள் பைண்டிங் (Books and Register Paper binding)
#  அழகிய கூடை மற்றும் வீட்டு உள் அலங்காரப்பொருட்கள் செய்தல்
#  டெய்லரிங் மற்றும் எம்ப்ராய்டரிங் (Tailoring & Embroidering)
#  மெழுகுவர்த்தி செய்தல் 
#  காளான் வளர்ப்பு 
#  வீட்டில் காய்கறி தோட்டம் பராமரிப்பு
Contact : IOB Regional Self Employment Training Institute (RSETI), 
 ESWARI NAGAR,  MC ROAD, THANJAVUR -  613007


Post a Comment

Previous Post Next Post