வாழ்க்கையைச் சிறப்பாக நடத்த வழிமுறைகள்

சில சூத்திரங்கள், சில கோட்பாடுகள், சில கோஷங்கள், சில விதிமுறைகள், இவற்றைச் சுற்றியே வாழ்க்கையைப் பின்னப் பார்க்கிறீர்கள். வாழ்க்கை அப்படி நடக்காது. உங்கள் வாழ்க்கையை அதன் அடிப்படைத் தன்மையை உணர்ந்து வாழத் தலைப்பட்டீர்கள் என்றால் தான் வாழ்க்கை அதன் உண்மையான முகத்தைத் தங்களுக்குக் காட்டும்.

காலை ஆறு மணிக்கு எழுந்திரு. மனைவியிடம் பத்து முறை ‘ஐ லவ் யூ’ என்று சொல், குழந்தையுடன் பத்து நிமிடங்களாவது செலவு செய். பக்கத்து வீட்டுக்காரர்களைப் பார்க்கையில் புன்னகைத்துக் காலை வணக்கம் சொல். என்றெல்லாம் சில வழிமுறைகளைப் பின்பற்றப் பார்த்தீர்கள் என்றால், சில நாட்களுக்குள் அது உங்களைத் தின்றுத் துப்பிவிடும். நீங்கள் மனைவிக்காக ஒதுக்கிய நேரத்தில் அவள் உங்களுடன் செலவு செய்யத் தயாராக இல்லாமல் இருந்தால், வாழ்க்கை நரகமாகிவிடும்.
சூத்திரங்களைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் சில நேரம் நினைத்ததை சாதிக்கலாம். ஆனால், அவர்கள் வாழ்வது உயிர்ப்புடன் கூடிய வாழ்க்கை அல்ல. உயிரற்ற இயந்திரத்தனமானவாழ்க்கை. இயந்திரத்தனமாக வாழ்பவர்கள் அதிலேயே மூழ்கடிக்கப்பட்டு சந்தோஷமற்ற முகங்களுடன் வளைய வருவதை நீங்கள் பார்க்கலாம்.
சூத்திரங்களை விட்டுத் தள்ளுங்கள். வாழ்க்கையை அந்தந்தத் தருணத்துக்கு ஏற்றபடி உணர்வுப்பூர்வமாக, முழுமையான விழிப்புணர்வுடன் வாழத் துவங்குங்கள்

Post a Comment

Previous Post Next Post