உங்கள் சம்பளத்தில் இருந்து வரியைச் சேமிப்பதற்கான சிறந்த 8 வழிகள்

நிதி ஆண்டின் கடைசி நேரத்தில் நிறைய வரி செலுத்துனர்கள் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் வரியை எப்படிக் குறைப்பது என்று சரியான வழிகாட்டி இல்லாமல் இருப்பார்கள். வருமான வரி சட்டம் நமக்கு 80சி மட்டும் இல்லாமல் நிறையப் பல சலுகைகள் மற்றும் அலவன்ஸ்களை வழங்குகின்றன. நீங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து வரியை எப்படிச் சேமிப்பது என்று குழப்பத்தில் இருப்பவர்களுக்கு 8 சிறந்த வழிகளை நாம் இங்குப் பார்ப்போம்.


மீல் வவுச்சர் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் உணவுக்கான மீல் வவுச்சர்கள் வழங்குகிறார்களா அதை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் குறைந்தது ரூ. 10,000 முதல் ரூ. 30,000 வரை சேமிக்கலாம்.
பயணப்படி உங்கள் பணியிடத்தில் வேலை சம்மதமாக பயணம் செய்கிறீர்கள் பயணப்படி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மாதம் ரூ. 1600 வரையும் ஆண்டுக்கு ரூ. 19,200 வரையும் வரியில் இருந்து வரிவிலக்குப் பெறலாம். ஒருவேலை நீங்கள் 10% வரி செலுத்துவோருக்கான கீழ் வருகிறீர்கள் என்றால் குறைந்தது ரூ. 2,000 முதல் அதிகபட்சமாக ரூ. 3,840 வரை கூடுதலாக வரியைச் சேமிக்கலாம்.
அலவன்ஸ் குழந்தைகள் படிப்பிற்கான அலவன்ஸ், தங்கும் இடத்திற்கான அலவென்ஸ், யுனிஃபார்ம் அலவன்ஸ், தொலைப்பேசி செலவு இது போன்றவை உங்கள் மொத்த சம்பளத்தில் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இது போன்ற நிறைய அலவன்ஸ்கள் மூலம் வரியை நீங்கள் சேமிக்கலாம்.
விடுப்பு பயணப்படி விடுப்பு பயணப்படி உங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்கிறார்கள் என்றால் இந்தியாவிற்குள் நீங்கள் செல்லும் பயனர்களுக்கு வரி விலக்கு நீங்கள் பெறலாம். இது வெளிநாட்டு பயனர்களுக்குப் பொருந்தாது
பொது வருங்கால வைப்பு நிதி பொது வருங்கால வைப்பு நிதிக்கு வரி தள்ளுபடிக்கான பிரிவு 80சி கீழ் வரி கிடையாது. உங்கள் பொது வருங்கால வைப்பு நிதியை உயர்த்துவன மூலமாக வரி செலுத்தாமல் சேமிக்கலாம்
மருத்துவ கட்டணங்கள் உங்களுக்கு மட்டும் உங்களைச் சார்ந்தவர்களுக்கான மருத்துவ கட்டண பில்களைச் சமரிப்பிக்கும் போது ரூ. 15,000 வரை வரி விலக்கைப் பெறலாம்
முதலீடுகள் 80 சி பிரிவின் கீழ் எல்ஐசி, பொது வருங்கால வைப்பு நிதி, வீட்டுக் கடன் மற்றும் இது போன்ற பிற முதலீடுகள் செய்வதன் மூலமாக ரூ. 1,50,000 வரை சேமிக்கலாம்
சரியான நேரத்தில் உங்கள் சான்றுகளை சமர்ப்பித்தல் உங்கள் சான்றுகளை சரியான நேரத்தில் சமர்ப்பித்தல் மற்றும் உங்கள் சம்பளத்தில் ஏதும் டிடிஎஸ் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

Post a Comment

Previous Post Next Post