60 வயதில் உங்களுக்கு ஏற்படும் நிதி பிரச்சனைகளை தீர்க்க 30 வயதில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்..?


இளம் வயது முதல் உங்கள் எதிர்காலத்திற்காகச் சேமித்து வருவது மிகவும் நல்லது. இப்படிச் செய்வதினால் உங்களது ஓய்வூதிய காலத்தில் பிறரை நம்பாமல், மன அழுத்தம் இல்லாமல் மற்றும் சந்தோஷமாக உங்கள் கடைசி காலத்தை வாழலாம். அதற்காக நீங்கள் உங்களுடைய 30 வயதில் இருந்து எப்படி முதலீடு செய்து ஓய்வு வாழ்க்கையைச் சிறந்த முறையில் கழிப்பது என்று இங்குப் பார்ப்போம்.
முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) 


நீண்ட காலத்திற்கு முறையான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது சிறப்பான லாபத்தை அளிக்கும். முறையான முதலீட்டுத் திட்டங்கள் உங்களுக்கு ஒழுக்கமான முதலீட்டை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் நீங்கள் என்ன தொகுப்பை தேர்ந்து எடுக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும். முறையான முதலீட்டுத் திட்டத்தில் அடிப்படையாக 3 நிதி திட்டங்கள் உள்ளன. அவை பெரிய மூலதனம், சிறிய / நடுநிலை மூலதனம், மற்றும் கடன் நிதிகள் என்று கூறப்படும். ஆனால் வல்லுநர்கள் 5 திட்டங்கள் பற்றி கூறுவர். முறையான முதலீட்டுத் திட்டத்தை பொருத்த வரை என்ன சிறப்பு என்றால் நாம் எப்போதும் சந்தை என்ன நிலையில் உள்ளது என்று பார்த்துக்கொண்டு இருக்கத் தேவையில்லை.


இன்சூரன்ஸ் பாலிசி 


ஒரு பொறுப்பான நபராக இருக்க வேண்டும் என்றால் உங்கள் நம்பி உள்ளவர்களை ஒரு போதும் நிதி நெருக்கடிகளில் சிக்காமல் வைத்திருக்க வேண்டும். எனவே சுகாதார காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்து இருக்க வேண்டும் மற்றும் டேர்ம் பாலிசியில் முதலீடு செய்து இருந்தால் அது உங்களது உடல் நலம் மற்றும் குடும்பம் இரண்டையும் பாதுகாக்கும். பல ஊழியர்கள் தாங்கள் பணி புரியும் நிறுவனங்கள் அளிக்கும் காப்பீடு திட்டங்கள் மட்டும் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது மட்டும் போதாது. எனவே குறைவான பீரிமியம் இருக்கும் போது புதிய சுகாதார பாலிசி எடுப்பது நல்லது. டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் 5,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையிலான பல தவணையில் உள்ளது. டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களில் நீங்கள் செலுத்தும் பீரிமியம் தொகையில் இருந்து எந்த முதிர்ச்சி தொகையும் உங்களுக்குக் கிடைக்காது. ஆனால் ஏதேனும் தவிர்க்க முடியாது அசம்பாவிதங்கள் உங்களுக்கு ஏற்படும் போது ஒரு பெரும் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு அளிக்கும்.


கடன்கள் 


கடன் வாங்குவதற்கு முன்பு இருமுறை சிந்தித்து வாங்குவது நல்லது. ஒரு கடன் வாங்கிவிட்டால் அதற்காக உங்கள் வங்கி கணக்கில் எப்போது ஒரு தொகையை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள். அவ்வாறு இல்லை என்றால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும். ஏற்கனவே கடன் ஏதேனும் நீங்கள் பெற்று இருந்தால் அதை முதலில் செலுத்திவிடவும். அது எவ்வளவு குறைவான திகையாக இருந்தாலும் சரி. அவற்றை நீங்கள் செலுத்திவிட்டால் முதலீடுகளில் உங்களால் கவனம் செலுத்த முடியும்.


ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டம் 


ஓய்வூதிய காலத்தில் தங்களுக்குப் பயன் அளிக்க வேண்டும் என்பதற்காகவே ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது. ஆனால் பலர் ஒரு நிறுவனத்தில் இருந்து பிற நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் போது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இருந்து பணத்தை எடுத்துவிடுகின்றனர். இது தவறு. யூஏஎன் போன்றவற்றைப் பயன்படுத்தி புதிய நிறுவன பிஎப் கணக்குடன் இனைத்துச் செயல்படுவது நன்மையை அளிக்கும்.


பண வீக்கம் 


ஒவ்வொரு வருடமும் 5 சதவீதம் வரை பணவீக்கம் அதிகரித்துவருகின்றது. எனவே இப்போது ஒரு பொருளை நீங்கள் வாங்குகின்றீர்கள் என்றால் பிற்காலத்தில் அதன் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது.


முடிவுரை 


மேலே கூறிய படிகளை நீங்கள் கடைப்பிடிக்கும் போது மகிழ்ச்சியான ஓய்வு கால வாழ்க்கையை நீங்கள் பெறுவீர்கள். எனவே இளைமை காலத்தில் இருந்தே சேமித்து அதனைச் செலவு செய்வது தான் முறையான நிதி கொள்கை ஆகும்.Post a Comment

Previous Post Next Post