2 நாளில் ரூ. 1100 கோடி.. விற்றுத் தள்ளிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

by -57 views

ஹைலைட்ஸ்:

  • இரண்டு நாட்களில் செம வியாபாரம்
  • 1100 கோடிக்கு விற்ற ஓலா ஸ்கூட்டர்கள்

ஓலா நிறுவனம் தமிழகத்தில் மிகப்பிரம்மாண்டமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை அமைத்து உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஓலா ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் தொடங்கிவிட்டது. ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் ஓலா ஸ்கூட்டர்கலை புக்கிங் செய்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், வெறும் இரண்டே நாட்களில் 1100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆட்டோமோட்டிவ் துறையில் மட்டுமல்லாமல், இந்திய ஈ-காமர்ஸ் துறையிலும் ஒரே பொருள் இவ்வளவு விற்பனையாகியிருப்பது இதுவே முதல்முறை என பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Bank Holidays: இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது!
விற்பனை தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே 600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டர்கள் விற்பனையாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு நாளில் ஒட்டுமொத்த இருசக்கர வாகன துறை விற்பனை செய்யும் அளவை விட இது அதிகம் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரமான பொருளுக்கு இந்தியாவில் நல்ல மதிப்பும், டிமாண்டும் இருப்பதை இந்த விற்பனை நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் பின் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் விற்பனை தொடங்கும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆண்டுக்கு 1 கோடி வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *