12,000 ரூபாய் பென்சன்… ஒரே பிரீமியம், வாழ்நாள் முழுவதும் பென்சன்!

by -48 views
12,000 ரூபாய் பென்சன்… ஒரே பிரீமியம், வாழ்நாள் முழுவதும் பென்சன்!
12,000 ரூபாய் பென்சன்… ஒரே பிரீமியம், வாழ்நாள் முழுவதும் பென்சன்!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) சார்பாக நிறைய காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கும், ஒரே பிரீமியம் செலுத்தி வாழ்நாள் முழுவதும் சுக வாழ்க்கை வாழ நினைப்பவர்களுக்கும் எல்.ஐ.சி. பாலிசி சிறந்த தேர்வாக இருக்கும். எல்.ஐ.சி நிறுவனத்தில் நிறைய திட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒரு பாலிசிதான் எல்.ஐ.சி. சரல் பென்சன் பாலிசி.

இந்த பாலிசி எடுத்தவர்கள் ஒரே ஒரு பிரீமியம் செலுத்தினாலே போதும். ஒவ்வொரு மாதமும் 12,000 ரூபாய் பென்சன் தொகை வந்துகொண்டே இருக்கும். கடைசிக் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ இது உதவியாக இருக்கும். இதில் இரண்டு வசதிகள் உள்ளன. சிங்கிள் லைஃப் பாலிசி மற்றும் ஜாயிண்ட் லைஃப் பாலிசி. சிங்கிள் லைஃப் பாலிசியில் ஒரு நபர் மட்டுமே பாலிசி எடுக்க முடியும். ஜாயிண்ட் லைஃப் பாலிசியில் கணவன் – மனைவி இருவருக்கும் பயன் கிடைக்கும்.

இந்த ஒரு பாலிசி போதும்… கடைசிக் காலத்தில் உட்கார்ந்தே சாப்பிடலாம்!
இந்த பாலிசியில் இன்னொரு வசதியும் உள்ளது. நீங்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம். பாலிசி வாங்கி ஆறு மாதங்களில் இந்த வசதி உங்களுக்குக் கிடைக்கும். இந்த பாலிசியின் கீழ் அதிகபட்சமாக வருடாந்திர செட்டில்மெண்ட் தொகையில் 50 சதவீதத்தைக் கடனாகப் பெறலாம். அதேபோல, கடனுக்கான வட்டியும் வருடாந்திரத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும். கடன் பாக்கி எதுவும் இருந்தால் கிளைம் தொகையில் அது கழிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *