1000 ரூபாய் போட்டால் 2000 ரூபாய் கிடைக்கும்! உடனே இதை வாங்குங்க!

by -50 views
1000 ரூபாய் போட்டால் 2000 ரூபாய் கிடைக்கும்! உடனே இதை வாங்குங்க!
1000 ரூபாய் போட்டால் 2000 ரூபாய் கிடைக்கும்! உடனே இதை வாங்குங்க!

இந்திய தபால் துறை சார்பில் 1988ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சிறு சேமிப்புத் திட்டம்தான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம். இத்திட்டத்தின் கீழ் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் நீங்கள் சேமிக்கும் பணம் 124 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும்.

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் தொடங்கி நீங்கள் முதலீடு செய்யலாம். இத்திட்டம் தொடக்கத்தில் விவசாயிகளுக்காகவே தொடங்கப்பட்டது. அதனால்தான் கிசான் விகாஸ் பத்ரா என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு பொதுமக்கள் அனைவருக்குமே இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் பண மோசடி நடப்பதைத் தடுப்பதற்காக, ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் கார்டு வழங்க வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தால் சம்பள ரசீது, வங்கிக் கணக்கு விவரங்கள், வருமான வரித் தாக்கல் போன்ற விவரங்களை வழங்க வேண்டும்.

தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? லாபமா நஷ்டமா?
கணக்கு வைத்திருப்பவரின் அடையாளச் சான்றாக ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டியதும் கட்டாயமாகும். 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இந்திய குடிமகனும் இத்திட்டத்தில் இணையலாம். அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே கிசான் விகாஸ் பத்திரத்தை வாங்கலாம். நீங்கள் இத்திட்டத்தில் 1000 ரூபாய் முதலீடு செய்தாலே திட்டத்தின் முதிர்வு காலத்தில் உங்களுக்கு 2000 ரூபாய் கிடைக்கும். நீங்கள் சேமிக்கும் பணத்தைப் பொறுத்து உங்களுக்கு இரு மடங்கு லாபம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *