1000 ரூபாயில் 10 லட்சம் லாபம்.. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி.. மக்களே உஷார்!

by -37 views

ஹைலைட்ஸ்:

  • ஆசை வார்த்தை கூறி ஏமாற்றும் மோசடி கும்பல்கள்
  • ரிசர்வ் வங்கி கொடுத்த எச்சரிக்கை

அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நிறைய லாபம் கிடைக்கும், பணம் கிடைக்கும், மாத வருமானம் கிடைக்கும் என மோசடி கும்பல்கள் ஆசை வார்த்தை கூறி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

இதுகுறித்து அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றும் மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

1000 ரூபாய் முதலீட்டில் 10 லட்சம் வருமானம் கிடைக்கும், கொஞ்சம் பணம் முதலீடு செய்தால் நிறைய வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஒட்டுமொத்தமாக பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடும் மோசடி கும்பல்கள் அதிகரித்துள்ளன.

Warren Buffett: பிஞ்சிலேயே பழுத்த முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் வெற்றிக் கதை!
இந்நிலையில், இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் பாதுகாப்பாக இருப்பதற்கு ரிசர்வ் வங்கி சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

* நண்பர்கள், குடும்பத்தினரை இணைத்தால் பணம் கிடைக்கும் என கூறும் மோசடி கும்பல்கள்

* இலவச சேவைகள் கிடைக்கும் என கூறும் அடையாளம் தெரியாத இணையதளங்கள் மற்றும் நிறுவனங்கள்

* ரிசர்வ் வங்கி, IRDAI, செபி, NHB மற்றும் வங்கிகளில் இருந்து பேசுகிறோம் என கூறி ஆசை வார்த்தை கூறுவோர்

* அரசு அதிகாரி அல்லது ரிசர்வ் வங்கி அதிகாரி அல்லது வங்கி அதிகாரிகள் என பொய் கூறி ஆசை வார்த்தை கூறும் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் SMS மற்றும் இமெயில்கள்.

* தண்டனை, அபராதம் விதிக்கப்படும் அல்லது பரிசுகள் கிடைக்கும் என கூறும் தொலைபேசி அழைப்புகள்

* முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என கூறும் மோசடி கும்பல்கள்

* வங்கிகள் வழங்குவதை விட அதிக லாபம் கிடைக்கும் என ஏமாற்றும் கும்பல்கள்

இதுபோன்றவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், பணத்தை இழக்க வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *