100 ரூபாயில் தங்கம்.. முதலீடு செய்ய ஐடியா!

by -24 views

ஹைலைட்ஸ்:

  • 100 ரூபாயில் தங்கம்
  • இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க

பண்டிகைக்காலம் தற்போது தொடங்கிவிட்டது. வழக்கமாக பண்டிகைக்காலங்களின்போது தங்கத்துக்கு செம டிமாண்ட் இருக்கும். அதற்கு ஏற்ப, தங்கத்தில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் இப்போது உருவாகியுள்ளது. மேலும், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு ஏற்ப பல்வேறு சூப்பர் திட்டங்களும் அறிமுகமாகியுள்ளன.

வெறும் 100 ரூபாயில் கூட தங்கத்தில் முதலீடு செய்வதற்கு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தனிஷ்க் (Tanishq), கல்யாண் ஜுவல்லர்ஸ் (Kalyan Jewellers) போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் 100 ரூபாயிலேயே தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்குகின்றன.

இதுபோக PC Jewelers, Senco Gold & Diamonds போன்ற நிறுவனங்களும் 100 ரூபாயில் தங்கத்தில் முதலீடு செய்ய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த பண்டிகை சீசனில் தங்கத்துக்கான டிமாண்ட் தாறுமாறாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்… ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு…
டிஜிட்டல் வழியாகவும் தங்கத்தை விற்பனை செய்ய பல்வேறு நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. மேற்கூறிய நிறுவனங்களின் இணையதளங்கள், மொபைல் ஆப்களின் வாயிலான ஆன்லைனிலும் தங்கத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், Phonepe போன்ற ஆப்கள் மூலம் குறைந்த விலையில் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய முடியும். தேவைப்படும்போது இந்த தங்கத்தை நேரடியாக வீட்டுக்கே டெலிவரி பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *