10 மடங்கு லாபம்.. அள்ளிக்கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

by -24 views

ஹைலைட்ஸ்:

  • கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு லாபம்
  • வருமானத்தை அள்ளிக்கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நல்ல வருமானம் தருகின்றன.

சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு லாபம்; அதாவது 900% லாபம் கொடுத்துள்ளன. உதாரணமாக, 2011ஆம் ஆண்டில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது சுமார் 1 கோடி ரூபாய் கிடைக்கும். அந்த அளவுக்கு வருமானம் கொடுத்த சில திட்டங்களை பற்றி பார்க்கலாம்.

ஐசிஐசிஐ புருடன்ஷியல் டெக்னாலஜி ஃபண்ட்

ICICI Prudential Technology Fund தொழில்நுட்பம் சார்ந்த பங்குகளில் மட்டுமே முதலீடு செய்து வருகிறது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 26.39% வருமானம் கொடுத்துள்ளது. 2011 அக்டோபர் 8ஆம் தேதி இத்திட்டத்தில் 10 லட்சம் முதலீடு செய்திருந்தால் இப்போது 1.04 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.

பென்சன் விதிகள் மாற்றம்.. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
எஸ்பிஐ ஸ்மால்கேப் ஃபண்ட்

SBI Smallcap fund எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்டின் முக்கியத் திட்டங்களில் ஒன்று. கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 26.07% வருமானம் கொடுத்துள்ளது. 2011 அக்டோபர் 8ஆம் தேதி இத்திட்டத்தில் 10 லட்சம் முதலீடு செய்திருந்தால் இப்போது 1.02 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.

நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட்

Nippon India Small Cap fund திட்டம் பத்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 25.29% வருமானம் கொடுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே இத்திட்டம் 99.43% வருமானம் கொடுத்துள்ளது. 2011 அக்டோபர் 8ஆம் தேதி இதில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 95.50 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.

மிரே அசெட் எமெர்ஜிங் புளூசிப்

Mirae Asset Emerging Bluechip திட்டம் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 69% வருமானம் கொடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 25.19% வருமானம் கொடுத்துள்ளது. 2011 அக்டோபர் 8ஆம் தேதி 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 94.7 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.

ஆதித்ய பிர்லா டிஜிட்டல் ஃபண்ட்

Aditya Birla Digital India fund திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் 23.54% வருமானம் கொடுத்துள்ளது. 2011 அக்டோபர் 8ஆம் தேதி இத்திட்டத்தில் 10 லட்சம் முதலீடு செய்திருந்தால் இப்போது 83 லட்சம் கிடைத்திருக்கும். மாதம் தோறும் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 49.44 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *