​கேப் விடாமல் உயரும் தங்கம்! பதறும் வாடிக்கையாளர்கள்!

by -27 views

தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று காலையில் விலையேற்றம் இருந்தது. இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக, தற்போது மாலை நேரத்திலும் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (அக்டோபர் 25) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,518 ஆக இருந்தது. மாலையில் அது 4,528 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, காலையில் 36,144 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 80 ரூபாய் உயர்ந்து 36,224 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Gold rate: நகை வாங்குவோர் கண்ணீர்… தொடரும் விலையேற்றம்!

தூய தங்கத்தின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இன்று காலை 4,882 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,892 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, காலையில் 39,056 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 80 ரூபாய் உயர்ந்து 39,136 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கவலை தரும் விதமாக தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.70.30 ஆக இருந்தது. மாலையில் அது ரூ.70.50 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 70,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *