ஹேப்பி நியூஸ்… தங்கம் விலை குறைஞ்சாச்சு!!

by -25 views

தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று காலையிலும் விலையேற்றம் இருந்தது. இந்நிலையில் மகிழ்ச்சிதரும் விதமாக, தற்போது மாலை நேரத்தில் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (அக்டோபர் 5) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,405 ஆக இருந்தது. மாலையில் அது 4,389 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, காலையில் 35,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 128 ரூபாய் குறைந்து 35,112 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

உங்ககிட்ட ஒரு ரூபாய் இருக்கா? 45000 ரூபாய் கிடைக்கும்!
தூய தங்கத்தின் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4,769 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,753 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, காலையில் 38,152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 128 ரூபாய் குறைந்து 38,024 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.64.80 ஆக இருந்தது. மாலையில் அது 65 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *