’ஸ்டீல் கிங்’ லக்‌ஷ்மி மிட்டலின் வெற்றிக் கதை!

by -26 views
’ஸ்டீல் கிங்’ லக்‌ஷ்மி மிட்டலின் வெற்றிக் கதை!
’ஸ்டீல் கிங்’ லக்‌ஷ்மி மிட்டலின் வெற்றிக் கதை!

ராஜஸ்தான் மாநிலத்தில் 1950ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி சாதாரண ஒரு மார்வாடி குடும்பத்தில் பிறந்தவர்தான் லக்‌ஷ்மி மிட்டல். தனது தாத்தாவுக்கு சொந்தமான வீட்டில் வெறும் தரை, கயித்து கட்டில் என் ஒரு சராசரி இளமைக் காலத்தையே லக்‌ஷ்மி மிட்டல் கழித்தார். ஹிந்தி மீடியம் ஸ்கூலில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், கல்கத்தா பல்கலைக் கழகத்தில் காமர்ஸ் பட்டம் பெற்றார். கல்கத்தாவில் லக்‌ஷ்மி மிட்டலின் தந்தை ஒரு ஸ்டீல் கம்பெனியில் பார்ட்னராக இருக்கவே அவரது குடும்பம் அப்படியே கல்கத்தாவுக்கு மாறியது.

அங்கு தனது குடும்பத்துடன் இணைந்து ஸ்டீல் உற்பத்தியில் ஈடுபட்டார் லக்‌ஷ்மி மிட்டல். சில காலத்திலேயே இந்தியாவில் ஸ்டீல் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், 1976ஆம் ஆண்டில் இந்தோனேசியா நாட்டில் ஸ்டீல் உற்பத்தி ஆலை ஒன்றை வாங்கி அதைப் புதுப்பித்து ஸ்டீல் உற்பத்தியில் ஈடுபட்டார். அப்போது ஸ்டீல் உற்பத்தியில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். அவரது தொழில் மெல்ல மெல்ல அனைத்து நாடுகளுக்கும் பரவியது. 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தனது ஆலைகளில் வேலைவாய்ப்பு வழங்கினார். ஸ்டீல் கிங் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.

2004ஆம் ஆண்டில் 42.1 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்து, உலகின் மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாக மிட்டல் ஸ்டீல் உருவெடுத்தது. இந்த நிறுவனம் 22 பில்லியன் டாலருக்கு மேல் லாபம் ஈட்டியது. தனக்குப் போட்டியாக இருந்த ஏர்செலர் நிறுவனத்தையும் வாங்கி ஏர்செலர் மிட்டல் என்ற பெயரில் உலகின் மிகப் பெரிய ஸ்டீல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் லக்‌ஷ்மி மிட்டல். இப்போது ஆண்டுக்கு 70 மில்லியன் டன் அளவு ஸ்டீல் உற்பத்தி செய்து உலகின் மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாக ஏர்செலர் மிட்டல் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்திய அரசின் பத்ம விபூஷண் விருது, யூரோப்பியன் பிசினஸ் மேன் ஆஃப் தி இயர் – 2004, ஸ்டீல் மேக்கர் ஆஃப் தி இயர் – 1996, வில்லி கோர்ஃப் ஸ்டீல் விஷன் அவார்டு – 1998, ஃபினான்சியல் டைம்ஸ் பெர்சன் ஆஃப் தி இயர் – 2006, 100 மோஸ்ட் இன்ஃபுளூவென்சியல் பெர்சன்ஸ் இன் தி வேர்ல்டு – 2007 உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் வென்றுள்ளார்.

1

இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் வசித்து வரும் இவர், ஸ்டீல் உற்பத்தியில் பல்வேறு நாடுகளில் முன்னிலை வகிக்கிறார். உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். உஷா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட லக்‌ஷ்மி மிட்டலுக்கு வனிஷா என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.

லக்‌ஷ்மி மிட்டலின் மகள் வனிஷாவின் திருமணம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. 2004ஆம் ஆண்டில் அமித் பாட்டியா என்பவருடன் நடைபெற்ற இந்தத் திருமணம் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது. பிரின்ஸ் வில்லியம் – கேத்தரின் தம்பதிக்கு நடைபெற்ற திருமணத்துக்கு ஆன செலவை விட லக்‌ஷ்மி மிட்டலின் மகளுக்கு ஆன திருமணச் செலவு இரு மடங்கு அதிகம் என்றால் பாருங்களேன்! மொத்தம் 55 மில்லியன் டாலர் செலவானது.

2

லக்‌ஷ்மி மிட்டலுக்கு சொந்தமான சொகுசு கப்பல் 125 மில்லியன் டாலர் மதிப்புடையது. 80 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் உலகிலேயே மிகப் பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றாகும். அதேபோல, லண்டனில் உள்ள லக்‌ஷ்மி மிட்டலின் வீடு உலகிலேயே மிகப் பெரிய வீடுகளில் ஒன்றாகும். இதை 2004ஆம் ஆண்டில் 67 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். தாஜ்மஹால் கட்டப்பட்ட பளிங்கு கற்களால்தான் 12 படுக்கை அறைகள் கொண்ட இந்த பிரம்மாண்ட வீடும் கட்டப்பட்டுள்ளது.

குடிசை வீட்டில் தொடங்கிய லக்‌ஷ்மி மிட்டலின் வாழ்க்கை இன்று பளிங்கு மாளிகையில் வந்து நிற்கிறது. இதுபோன்ற இன்னும் பல மாளிகைகள் லக்‌ஷ்மி மிட்டலுக்கு சொந்தமாகலாம். இந்த இடத்தை இவர் எளிதாக அடைந்துவிடவில்லை. விடா முயற்சியும் தீவிர உழைப்பும்தான் இவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. அது உங்களிடமும் இருந்தால் நீங்களும் ஒரு லக்‌ஷ்மி மிட்டலாக மாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *