வேலைய விட்டு வெளியேறியாச்சா? PF கணக்கில் இது முக்கியம்!

by -47 views

ஒரு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும்போது அங்கு உங்களுக்கு பிஎஃப் கணக்கு திறக்கப்படலாம். ஒவ்வொரு மாதமும் உங்களது சம்பளத்திலிருந்து பிஎஃப் கணக்கில் சிறிய தொகை போய்க்கொண்டே இருக்கும். நிறுவனம் தரப்பிலிருந்து உங்களுக்கு பங்களிப்பு கிடைக்கும். ஒருவேளை நீங்கள் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட்டால் என்ன ஆகும்? பிஎஃப் கணக்கில் இருக்கும் பணம் அப்படியே இருக்குமா? அல்லது புதிய நிறுவனத்தில் புதிய கணக்குடன் இணைக்கப்படுமா? ஏற்கெனவே இருந்த பணத்தை எடுக்க முடியுமா போன்ற பல சந்தேகங்கள் இருக்கும்.

நீங்கள் புதிய நிறுவனத்தில் இணைந்தாலும் சரி, வேலையே பார்க்காமல் இருந்தாலும் சரி, இந்த வேலையை முடித்தாக வேண்டும். அதாவது பிஎஃப் கணக்கில் நீங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய தேதியை அப்டேட் செய்ய வேண்டும். அப்போதுதான் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். அதை அப்டேட் செய்வது எளிதான காரியம்தான். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யலாம்.

பிஎஃப் அமைப்புடைய https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.

அதில் உங்களுடைய பிஎஃப் நம்பர் (UAN), பாஸ்வர்டு கொடுத்து லாகின் செய்ய வேண்டும். ‘manage’ ஆப்சனில் உள்ள ‘mark exit’ என்பதை கிளிக் செய்யவும்.

நீங்கள் வேலை பார்த்த நிறுவனம் மற்றும் பிஎஃப் நம்பரை டிராப் டவுன் பாக்ஸில் செலெக்ட் செய்ய வேண்டும்.

நீங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய தேதியையும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட வேண்டும்.

அடுத்ததாக ஓடிபி ஆப்சனை கிளிக் செய்தால் உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு ‘update’ கொடுக்க வேண்டும்.

உங்களது அப்டேட் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான மெசேஜ் ஸ்கீரினில் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *