வெளிநாட்டுக்கு போஸ்ட் அனுப்பணுமா? இந்தியா போஸ்ட் சூப்பர் வசதி!

by -37 views
வெளிநாட்டுக்கு போஸ்ட் அனுப்பணுமா? இந்தியா போஸ்ட் சூப்பர் வசதி!
வெளிநாட்டுக்கு போஸ்ட் அனுப்பணுமா? இந்தியா போஸ்ட் சூப்பர் வசதி!

உங்களிடம் உள்ள மிக முக்கியமான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டுமா? கவலை வேண்டாம். உங்களுக்காகவே சர்வதேச ஸ்பீட் போஸ்ட் (EMS) சேவை உள்ளது. இந்திய தபால் துறை (இந்தியா போஸ்ட்) சார்பாக இந்தச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆவணங்கள் மற்றும் வணிகப் பொருட்களை அதி விரைவாக அனுப்ப முடியும்.

சமீபத்தில், இந்தியா போஸ்ட் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் EMS சேவை பற்றி ட்வீட் செய்திருந்தது. அதில், “சர்வதேச ஸ்பீட் போஸ்ட் (இஎம்எஸ்) என்பது ஆவணங்கள் மற்றும் வணிகப் பொருட்களை சரியான நேரத்தில் அனுப்பும் சர்வதேச அஞ்சல் சேவையாகும். மேலும் தகவலுக்கு இந்த வெப்சைட்டைப் பார்க்கவும். cutt.ly/OWgbcyg#AapkaDostIndiaPost.” என்று தெரிவித்திருந்தது.

மேலே குறிப்பிடப்பட்ட வெப்சைட்டில் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரம்பில் பார்சல் அனுப்பலாம் என்ற விவரம் பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச ஸ்பீட் போஸ்ட் சேவையை நீங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் பெறலாம். மெட்ரோ மற்றும் பிற முக்கிய நகரங்களில், சர்வதேச ஸ்பீட் போஸ்ட் சேவையி மாலை நேரம் வரை முன்பதிவு செய்யலாம். மேலும், சர்வதேச ஸ்பீட் போஸ்டுக்கான ஆன்லைன் டிராக்கிங் வசதியையும் இந்தியா போஸ்ட் வழங்குகிறது.

இரு மடங்கு லாபம்! பணத்தை அள்ளிக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
சர்வதேச ஸ்பீட் போஸ்ட் வழியாக அனுப்ப சில எடை சார்ந்த கட்டுப்பாடுகள் உள்ளன. அதிகபட்ச எடை 35 கிலோ வரை மட்டுமே நீங்கள் அனுப்ப முடியும். ஏனெனில், சில நாடுகளில் குறைந்தபட்ச எடை கட்டுப்பாடுகள் உள்ளன. நீங்கள் அனுப்பும் ஆவணத்தின் அளவு 1.5 மீட்டர் வரை மட்டுமே இருக்க வேண்டும். நீள, அகலம் சேர்த்து 3 மீட்டருக்குள் இருக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *