வெறும் 29 ரூபாய் போதும்… ரூ.4 லட்சம் சம்பாதிக்கலாம்! பெண்களுக்கான சூப்பர் திட்டம்!

by -27 views

பாதுகாப்பான இடத்தில் உங்களுடைய பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் இது உங்களுக்கு சிறந்த திட்டமாக இருக்கும். ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் பெண்களுக்கான ஒரு சிறப்புத் திட்டம்தான் எல்.ஐ.சி. ஆதார் ஷீலா பாலிசி திட்டம். 8 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆதார் கார்டு இருந்தால் போதும்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு காலத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆண்டுகள். இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகையை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு அளவில் செலுத்தலாம்.

உதாரணமாக, உங்களுக்கு இப்போது 30 வயது என்று வைத்துக் கொண்டால் நீங்கள் ஒரு நாளைக்கு 29 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். முதல் ஆண்டில் உங்களது டெபாசிட் தொகை ரூ.10,959 ஆக இருக்கும். அடுத்த ஆண்டில் நீங்கள் ரூ.10,723 செலுத்த வேண்டும். இப்படியே வருடாந்திர அளவிலோ, காலாண்டு அளவிலோ அல்லது மாதாந்திர அளவிலோ பிரீமியம் செலுத்தலாம்.

LIC பாலிசிதாரர்களுக்கு எச்சரிக்கை! இதைச் செய்யாவிட்டால் ஆபத்து!
மொத்தம் 20 ஆண்டுகளில் நீங்கள் ரூ.2,14,696 செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் முதிர்வுக் காலத்தில் உங்களுக்குக் கிடைப்பதோ ரூ.3.97 லட்சம். இவ்வாறு எல்.ஐ.சி. நிறுவனத்தின் இந்த ஆதார் ஷீலா பாலிசி திட்டத்தில் பெண்கள் அதிக லாபத்தைப் பெறலாம். பெண்களுக்கான சேமிப்புத் திட்டங்கள் குறைவாக இருக்கும் நிலையில், எல்.ஐ.சி. நிறுவனத்தின் இந்த பாலிசி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

கொரோனா பிரச்சினை வந்தபிறகு பெரும்பாலானோர் தங்களது பணத்தை ஏதேனும் ஒரு திட்டத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்க நினைக்கின்றனர். எதிர்காலத்தில் திடீரென நிதி நெருக்கடி ஏற்படும்போதோ அல்லது தங்களது ஓய்வுக் காலத்தில் ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்கவோ இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *