வீட்டுக் கடன் வாங்கணுமா? இது நல்ல சான்ஸ்!

by -20 views

நம் அனைவருக்குமே சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வீடு இல்லாதவர்கள் கடன் வாங்கியாவது வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்று நினைப்பார்கள். கடன் வாங்குவது சரி, ஆனால் எந்த வங்கியில் வாங்க வேண்டும், எவ்வளவு வாங்க வேண்டும் என்று முதலில் யோசிக்க வேண்டும். குறைந்த வட்டியில் கடன் வாங்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், உடனடியாகக் கடன் கிடைப்பது, செயல்பாட்டுக் கட்டணங்கள் குறைவாக இருப்பது, போன்ற பல்வேறு அம்சங்களைப் பார்த்து வாங்கினால் நல்லது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் பல்வேறு வங்கிகளும் வீட்டு நிதி நிறுவனங்களும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகின்றன. அவற்றில் கொடாக் மகிந்திரா வங்கிதான் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. அங்கு வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது. ரூ.75 லட்சம் வரையிலான கடன்களுக்கு இது பொருந்தும். அதைத் தாண்டிய கடன் தொகைக்கு வட்டி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும்.

இனி பென்சன் வராது.. உடனே இதை பண்ணிடுங்க!
கொடாக் மகிந்திரா வங்கியைத் தொடர்ந்து பஞ்சாப் & சிந்த் வங்கியில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.65 சதவீதமாக இருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட வங்கிகளும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகின்றன.

கொடாக் மகிந்திரா பேங்க் – 6.5%
பஞ்சாப் & சிந்த் பேங்க் – 6.65%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 6.7%
டாடா கேப்பிட்டல் – 6.7%
பேங்க் ஆஃப் பரோடா – 6.75%
பஜாஜ் ஃபின்செர்வ் – 6.75%
பஞ்சாப் நேஷனல் பேங்க் – 6.8%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *