வீட்டுக் கடன் வட்டி தள்ளுபடி.. அதிரடி அறிவிப்பு!

by -19 views

ஹைலைட்ஸ்:

  • வீட்டுக் கடன், கார் கடன்களுக்கான வட்டி குறைப்பு
  • பேங்க் ஆஃப் இந்தியா அதிரடி அறிவிப்பு

பண்டிகை சீசன் தொடங்க்கியுள்ள நிலையில் ஏற்கெனவே எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடன், கார் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. இந்த வரிசையில் தற்போது பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) வங்கியும் வட்டியைக் குறைத்துள்ளது.

வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கு பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வட்டியைக் குறைத்துள்ளது. இதன்படி, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வீட்டுக் கடன்களுக்கு வட்டி 6.50% முதல் தொடங்குகிறது. வீட்டுக் கடன்களைப் பொறுத்தவரை இது மிக மிகக் குறைவான வட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக் கடன்களுக்கு ஏற்கெனவே வட்டி விகிதம் 6.85% ஆக இருந்தது. இப்போது 6.50% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, வாகனக் கடன்களுக்கான வட்டி 7.35% ஆக இருந்த நிலையில் தற்போது 6.85% ஆக குறைக்கப்பட்டுள்ளது என பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது.

வீடு வாங்கவா போறிங்க? ரொம்ப கம்மி ரேட்டில் வாங்க சூப்பர் வாய்ப்பு!
எனினும், இச்சலுகைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் மட்டுமே பெற முடியும். அக்டோபர் 18ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை இச்சலுகைகளை பெறலாம். புதிதாக கடன் வாங்குவோரும், வேறு வங்கியில் இருந்து கடனை டிரான்ஸ்ஃபர் செய்வோரும் இச்சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாம, வீட்டுக் கடன் மற்றும் கார் கடன்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை பிராசஸிங் கட்டணங்கள் (Processing fees) ரத்து செய்யப்படுவதாக பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *