வீடு வாங்க சூப்பர் வாய்ப்பு… அரசு வங்கி அறிவிப்பு!

by -25 views

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க், தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை ஒவ்வொரு நாளும் அறிவித்து வருகிறது. அதன்படி வீடு மற்றும் சொத்துகளை விற்பனை செய்யும் ஏலம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்துகொண்டு வீடு போன்ற சொத்துகளை வாங்கலாம்.

https://ibapi.in என்ற வெப்சைட்டில்தான் இந்த ஏலம் நடைபெறுகிறது. பஞ்சாப் நேஷனல் பேங்க் மட்டுமல்லாமல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 11 வங்கிகளில் இந்த ஏலத்தில் சொத்துகளை விற்பனை செய்கின்றன. இந்த ஏலத்தில் 2,600 வர்த்தக சொத்துகளும், 1,350 தொழில் துறை சொத்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அக்டோபர் 28ஆம் தேதி ஏலம் நடைபெறும்.

இதுபோன்ற ஏலம் நடைபெறுவது இது முதல் முறையல்ல. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாத கடனாளிகளின் சொத்துகளை வங்கிகள் ஏலத்தில் விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெடி: தீபாவளி முடிந்ததும் கொண்டாட்டம்!!
இவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை மூலமாக கடன் வசூல் செய்யப்படுகிறது. இதில் பொதுமக்களும் குறைந்த விலைக்கு சொத்து வாங்க முடியும் என்பதால் இதில் நிறையப் பேர் பங்கேற்பார்கள். இது ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *