விவசாயிகளுக்கு ரூ.4000 பணம்: இன்றே கடைசி நாள்!

by -20 views

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக ரூ.2000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த 6000 ரூபாய் நிதியுதவி மூலமாக விவசாயிகள் உரம் வாங்குவது உள்ளிட்ட விவசாயச் செலவுகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இத்திட்டம் விவசாயிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இன்னும் பலர் இத்திட்டத்தின் கீழ் இணையாமல் இருக்கின்றனர்.

ஒன்பதாவது தவணைப் பணம் இன்னும் வராமல் இருந்தால் அதற்கு பதிவு செய்வதற்கு இன்றே கடைசி நாள். அதாவது செப்டம்பர் 30. பதிவு செய்த பின்னர் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அக்டோபர் மாதத்துக்கான தவணையும், டிசம்பர் மாதத்துக்கான தவணையும் சேர்ந்து கிடைக்கும். அதாவது மொத்தம் 4000 ரூபாய் விவசாயிகளுக்குக் கிடைக்கும். அனைவருக்குமே இந்த நிதியுதவி கிடைத்துவிடாது. வருமான வரி செலுத்துவோர் அரசு ஓய்வூதியம் பெறுவோர் போன்ற சில பிரிவினர் இதில் இணைய முடியாது.

PM kisan: வருமான வரி செலுத்தினால் பணம் கிடைக்குமா?
இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்வதற்கு பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று பதியலாம். வங்கிக் கணக்கு, மொபைல் நம்பர், ஆதார் போன்ற ஆவணங்கள் அவசியமாகும். நில ஆவணமும் தேவைப்படும். முக்கியமாக, வங்கிக் கணக்கில் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்று தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதாரை இணைப்பதற்கு Farmer’s Corner என்ற ஆப்சனில் சென்று இணைக்கலாம். தகுதியுடைய விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். வங்கிக் கணக்கு எண், ஆதார் போன்றவற்றில் பிரச்சினை இருந்தால் நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *