விவசாயிகளுக்கு ரூ.18 லட்சம்… மத்திய அரசின் புதிய திட்டம்!

by -25 views

நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக, மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில்தான் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் புதிய மசோதா குறித்த அறிவிப்பு வெளியாகியது. இந்த மசோதா அமலுக்கு வந்தால் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.18 லட்சம் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும். பிஎம் கிசான் FPO என்ற திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி விவசாய உற்பத்தியாளர் அமைப்புக்கு (FPO) வழங்கப்படும்.

FPO என்பது ஒரு விவசாய அமைப்பாகும். இதில் நிறைய விவசாயிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். விவசாயிகளுக்கான தொழில்நுட்ப சேவைகள், சந்தைப்படுத்தல், பதப்படுத்துதல் மற்றும் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் விவசாயிகளுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும். சென்ற 2020ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 2024ஆம் ஆண்டுக்குள் 5 ஆண்டுகளில் 10,000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க ஒப்புதல் அளித்தது.

PM kisan: வருமான வரி செலுத்தினால் பணம் கிடைக்குமா?
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு புதிதாக விவசாயத் தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படும். 11 விவசாயிகள் ஒன்று சேர்ந்து இந்த FPO அமைப்பை உருவாக்க வேண்டும். மிகவும் பின்தங்கிய சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தவணை முறையில் நிதியுதவி வழங்கப்படும். தவணையாக வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 2024ஆம் ஆண்டுக்குள் ரூ.6,885 கோடி செலவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *