விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. அதிரவைக்கும் 10,000 சலுகைகள்!

by -23 views

ஹைலைட்ஸ்:

  • விவசாயிகளுக்கு 100% ட்ராக்டர் கடன்
  • கிராமப்புற மக்களுக்கு 10,000 சலுகைகள்

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு நிறுவனங்களும், வங்கிகளும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதிலும் வித்தியாசமாக எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது.

கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு 10,000க்கும் மேற்பட்ட சலுகைகளை அறிவித்து அமர்க்களம் செய்துள்ளது எச்டிஎஃப்சி வங்கி. பொதுச் சேவை மையங்களுடன் (CSC) இணைந்து இச்சலுகைகளை எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.

இதற்காக 10,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுடனும் எச்டிஎஃப்சி வங்கிக் கூட்டணி அமைத்துள்ளது. எச்டிஎஃப்சி கார்டு, கடன், ஈசி EMI என அனைத்திலும் 10,000க்கும் மேற்பட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. தனிநபருக்கு தேவையான பொருட்கள், தொழில் மற்றும் விவசாயத்துக்கு தேவையான பொருட்கள் என பலவற்றுக்கும் சலுகை வழங்கப்படுகிறது.

ரூ. 1500 முதலீடு.. 31 லட்சம் வருமானம்.. போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
இதுமட்டுமல்லாமல், புதிய ட்ராக்டர் அல்லது வேளாண் உபகரணங்களை வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு தள்ளுபடி வழங்குகிறது எச்டிஎஃப்சி வங்கி. ட்ராக்டர் வாங்க 100% கடன் வழங்குகிறது. இதர சலுகைகளை பொறுத்தவரை 10.25% வட்டிக்கு தனிநபர் கடன், 7.50% வட்டிக்கு கார் கடன் வழங்கப்படுகிறது.

வழக்கமாக பண்டிகை சீசன் என்றால் நகர்ப்புறங்களை குறிவைத்தே பல சலுகைகள் வழங்கப்படும். எனினும், இம்முறை கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் சலுகைகளை வழங்க எச்டிஎஃப்சி வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதனால் கிராமப்புற மக்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் பயனடைவர் எனவும், கிராமங்களில் தொழில் ஊக்கம் பெறும் எனவும் CSC நிர்வாக இயக்குநர் தினேஷ் குமார் தியாகி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *