வருமான வரி: 91 லட்சம் பேருக்கு பணம் வந்தாச்சு!

by -52 views

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்ற ஆண்டின் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இக்காலத்தில் நாட்டு மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. அதோடு, வரி செலுத்தியோருக்குத் திரும்பி வரவேண்டிய ரீஃபண்ட் தொகையையும் வருமான வரித் துறை வேகமாக வழங்கி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைத் தொடர்ந்து ரீஃபண்ட் தொகையை வருமான வரித் துறை தொடர்ந்து வழங்கி வருகிறது.

அதன்படி, 2021 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரையில் மொத்தம் 91.30 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1,12,489 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டே ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்கி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள மொத்த ரீஃபண்ட் தொகையில், தனிநபர் வருமான வரியாக மொத்தம் 89.53 லட்சம் பேருக்கு ரூ.33,548 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கார்பரேட் வரி பிரிவின் கீழ் 1.75 லட்சம் பேருக்கு ரூ.78,942 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

Gold rate: உடனே நகைக் கடைக்கு ஓடுங்க மக்களே!!

கொரோனா பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டிருந்தது. ஜூலை 31ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறையப் பேர் 2020-21ஆம் ஆண்டுக்கான வருமான வரியைச் செலுத்தி வருகின்றனர். மறுபுறம் அவர்களுக்கு வரவேண்டிய ரீஃபண்ட் தொகையையும் வருமான வரித் துறை விடுவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *