வருமான வரி… கொஞ்சம் மிஸ் ஆனால் ரூ.5000 அபராதம்!

by -24 views

வருமான வரி தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 30தான் கடைசி தேதி. ஆனால், கொரோனா – ஊரடங்கு போன்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் இருப்பதால் வரி செலுத்துவோர் அசால்டாக இருந்துவிட வேண்டாம். கால அவகாசம் முடிவதற்குள் வரித் தாக்கல் செய்யாவிட்டால் பிரச்சினைதான்.

வருமான வரியை சரியான சமயத்தில் தாக்கல் செய்யாவிட்டால் அவர்கள் 5,000 ரூபாய் வரையில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். கொரோனா வந்த பிறகு அனைவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் இதுபோல அபராதம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். இப்போதாவது பரவாயில்லை; அபராதம் 5000 ரூபாய்தான். ஆனால் இதற்கு முன்னர் அபராதத் தொகை 10,000 ரூபாயாக இருந்தது.

வருமான வரி தாக்கல்… இதெல்லாம் ரொம்ப முக்கியம்!
இந்த அபராதத் தொகை அனைவருக்கும் பொருந்தாது. ரூ.5 லட்சம் வரையில் வருமானம் கொண்டவர்கள் கடைசித் தேதிக்குள் வருமான வரி செலுத்தாவிட்டால் அவர்களுக்கு ரூ.1000 மட்டுமே அபராதம். ஆனால் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் கொண்டவர்கள் டிசம்பர் 31ஆம் தேதியைத் தாண்டி செலுத்தினால் 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். வழக்கமாக செப்டம்பர் மாத இறுதி வரையில்தான் அவகாசம் வழங்கப்படும். இதில் தாமதம் ஏற்படும்போது டிசம்பர் மாத இறுதி வரை ரூ.5,000 மற்றும் ஜனவரி மாத இறுதிவரை ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *