வருங்கால வைப்புத்தொகை வட்டி விகிதம் மாற்றமில்லை

by -28 views
வருங்கால வைப்புத்தொகை வட்டி விகிதம் மாற்றமில்லை
வருங்கால வைப்புத்தொகை வட்டி விகிதம் மாற்றமில்லை

சென்னை: பொது வருங்கால வைப்புத்தொகை வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 7.1 சதவீதமாக மீண்டும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் ஒவ்வொரு 3 மாதமும் மாற்றி அமைக்கப்படும். அதன்படி கடந்த 3 மாதத்தில் பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி 7.1 சதவீதம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன் கால அவகாசம் முடிந்த நிலையில், மீண்டும் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 7.1 % ஆகவே நிர்ணயம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *