வரிசைகட்டும் IPOக்கள்.. மொத்த லிஸ்ட் இதோ!

by -34 views

ஹைலைட்ஸ்:

  • அடுத்த சில வாரங்களுக்குள் தொடங்கும் ஐபிஓக்கள்
  • முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

கடந்த சில மாதங்களாக இளம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஐபிஓ மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். ஐபிஓ என்றால் என்ன? ஒரு தனியார் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிட முயலும்போது ஐபிஓ (IPO – Initial Public Offering) மூலம் பொது முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்கிறது. இதுவே ஐபிஓ எனப்படுகிறது.

இன்று முதல் அடுத்த சில நாட்களில் தொடங்கும் ஐபிஓக்கள் பற்றிய தகவல்களை பற்றி பார்க்கலாம். அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் நைகா (Nykaa) நிறுவனத்தின் ஐபிஓ இன்று முதல் தொடங்கியுள்ளது. இதுபோக வேறு சில ஐபிஓக்களும் அடுத்த சில தினங்களில் தொடங்குகின்றன.

Fino Payments Bank ஐபிஓ நாளை (அக்டோபர் 29) தொடங்குகிறது. SJS Enterprises ஐபிஓ நவம்பர் 1ஆம் தேதி தொடங்குகிறது. PB Fintech (PolicyBazaar) ஐபிஓ நவம்பர் 1ஆம் தேதி தொடங்குகிறது. Paytm ஐபிஓ நவம்பர் 8ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100% லாபம்.. வாரி வழங்கிய திட்டங்கள்.. செமயா சம்பாதிக்கலாம்!

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான Star Health and Allied Insurance நிறுவனம் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபிஓவை விரைவில் தொடங்கவுள்ளது.

Adani Wilmar நிறுவனத்தின் சுமார் 4,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபிஓ விரைவில் தொடங்கவுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த Penna Cement நிறுவனத்தின் 1,300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபிஓ அடுத்த சில வாரங்களுக்குள் தொடங்கவுள்ளது.

இதுபோக Latent View Analytics நிறுவனத்தின் 474 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபிஓ விரைவில் தொடங்கவுள்ளது. பார்மா துறையை சேர்ந்த Sigachi Industries நிறுவனத்தின் ஐபிஓ நவம்பர் 1ஆம் தேதி தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *