வரிசைகட்டும் எலெக்ட்ரிக் கார்கள்… ரூ.15000 கோடி முதலீடு!

by -25 views

எலெக்ட்ரிக் வாகனம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த காலம் மாறி, இப்போது அனைவருமே வீட்டுக்கு ஒரு எலெக்ட்ரிக் பைக்கோ, காரோ வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் இப்போது மக்களிடையே பிரபலமாகிவிட்டன. அதுவும் பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையும் மக்களிடையே அதிகரித்துவிட்டது. இவற்றின் விலை குறைவு என்பதோடு, சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினை, பராமரிப்புச் செலவுகள், அதன் தோற்றம் போன்ற பல்வேறு அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வரிசையாக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நிறையப் பேர் மாறி வருகின்றனர். இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக 10 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.15,000 கோடிக்கு மேல் இந்நிறுவனம் முதலீடு செய்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் பிரிவில் ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்ய இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கணுமா? பெஸ்ட் சாய்ஸ் இதோ…
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வாகனங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 முதல் 3,500 யூனிட்கள் வரை முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் மாதத்துக்கு 1000 யூனிட்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டெலிவரி செய்ய முடிகிறது. இதற்காக அதிகளவில் முதலீடு செய்து வாகன விற்பனையை மேம்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அதிகமான அளவில் அறிமுகம் செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக கோடிக் கணக்கில் முதலீடு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *