லோன் வாங்கப் போறீங்களா? இதைப் பாத்துட்டு வாங்குங்க!

by -26 views

கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரமே மிக மோசமான நிலையை எட்டியது. ஊரடங்கு போன்ற பிரச்சினைகளால் பொதுமக்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக, தங்களது அன்றாடச் செலவுகளையே சமாளிக்க முடியாமல் பலர் தவிக்கின்றனர். இதனால் வேறு வழியே இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கடன் வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் வங்கிகளில் தனிநபர் கடன்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

தனிநபர் கடன் (பெர்சனல் லோன்) குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான வகையில் கிடைக்கின்றன. இது பாதுகாப்பானதும்கூட. இதற்காக கொலேட்ரல் எதையும் வழங்கத் தேவையில்லை. பெர்சனல் லோன் வாங்க முடிவெடுத்துவிட்டால் முதலில் எந்த வங்கியில் வாங்குவது என்று முடிவெடுக்க வேண்டும். வட்டி எங்கே குறைவாக உள்ளது, செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு, உடனடியாக ஒப்புதல் கிடைத்துவிடுமா என்று பார்க்க வேண்டும். பல்வேறு வங்கிகளின் வெப்சைட்களிலேயே இதுபோன்ற விவரங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… சம்பள உயர்வு!!
கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம், ஈஎம்ஐ வசதி போன்ற விஷயங்களையும் பார்க்க வேண்டும். பொதுவாக உங்களது கிரெடிட் ஸ்கோர் பொறுத்தே வங்கிகள் கடன் வழங்கும். எனவே அதை சரியாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். வேறு ஏதேனும் வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இருப்பது போன்ற செயல்பாடுகள் உங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். உங்களது கிரெடிட் ஸ்கோர் 800க்கு மேல் இருந்தால் உங்களுக்குக் குறைந்த வட்டியில் பெர்சனல் லோன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *