ரேஷன் கார்டு: மக்களுக்கு உதவ புதிய திட்டம்! வருமானமும் உயரும்!

by -33 views

ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டுகள் மூலமாக உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் நிதியுதவி, நிவாரணத் தொகை போன்றவையும் வழங்கப்படுகிறது. அனைத்து வீடுகளிலும் மிக முக்கியமான ஒன்றாக உள்ள இந்த ரேஷன் கார்டில் ஏதேனும் அப்டேட் அல்லது திருத்தம் செய்வதாக இருந்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட வேண்டியதாக இருக்கிறது. அதை எளிமைப்படுத்துவதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை மேம்படுத்துவதற்காக, ’சிஎஸ்சி இ-கவர்னன்ஸ் இந்தியா லிமிட்டெட்’ நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. வர்த்தக வாய்ப்புகள் மற்றும் ரேஷன் கடைகளின் வருமானம் ஆகியவற்றை அதிகரிப்பதற்காகவும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது, தற்போதுள்ள ரேஷன் கார்டுகளில் ஏதேனும் அப்டேட் செய்வது, ஆதார் எண் இணைப்பு போன்ற சேவைகள் எளிதாகக் கிடைக்கும்.

ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: இனி பொருட்களை இப்படித்தான் வாங்க வேண்டும்..!
பொதுச் சேவை மையங்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் இச்சேவைகளை இனி எளிதாகப் பெறலாம். ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களின் இருப்பு நிலவரத்தை அறிந்துகொள்வதும், புகார்களைப் பதிவு செய்வதும் இனி எளிதாக இருக்கும். ய்ய வேண்டும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், மத்திய நுகர்வோர் நலன் – உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை உறுதிசெய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *