ரூ. 500 முதலீட்டில் பென்சன்.. போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

by -23 views

ஹைலைட்ஸ்:

  • பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி
  • வருங்கால வைப்புநிதித் திட்டத்திற்கான வட்டி விகிதம்

ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பாக முதலீடு செய்து, அதே வேளையில் நல்ல வருமானம் சம்பாதிக்க வேண்டுமென விரும்புவோருக்கு போஸ்ட் ஆபீஸிலேயே அட்டகாசமான திட்டங்கள் உள்ளன. இத்திட்டத்தில் பென்சன் உள்ளிட்ட பலன்களும் கிடைக்கிறது.

நீங்கள் அமைப்புசாரா துறையை சேர்ந்த தொழிலாளராக இருப்பின் பணிஓய்வுக் காலத்துக்கு திட்டமிட பொது வருங்கால வைப்புநிதி (PPF) சூப்பரான திட்டம். ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம்.

இதில் முதலீடு செய்வோருக்கு வருமான வரிச் சலுகைகளும் கிடைக்கின்றன. இந்தியக் குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போது இத்திட்டத்துக்கு 7.1 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் டெபாசிட்டரின் கணக்கிற்கு வட்டித் தொகை செலுத்தப்படும்.

வீடு வாங்கவா போறிங்க? ரொம்ப கம்மி ரேட்டில் வாங்க சூப்பர் வாய்ப்பு!
இந்த வட்டி வருமானத்துக்கு வருமான வரி கிடையாது என்பது கூடுதல் சிறப்பு. இத்திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். அதன்பின்னர் முதலீடு மெச்சூரிட்டியை எட்டிவிடும். கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டு இந்த 15 ஆண்டுகளில் வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *